Thursday 31 December 2015

LIBRARY AND INFORMATION ASSISTANT VACANCIES IN PUDUCHERRY

புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை புதுச்சேரியில் பணிபுரிய 53 LIBRARY AND INFORMATION ASSISTANT (GROUP B NON GAZETTED, NON MINISTERIAL) காலியிடங்களுக்கு மனுக்களைக் கோரியுள்ளது. கல்வித் தகுதி, வயது, இடஒதுக்கீடு போன்ற இது தொடர்பான முழு விவரங்களை http://art.puducherry.gov.in-ல் காணலாம். on line மூலமாக விண்ணப்பிக்க http://recruitment.puducherry.gov.in -ல் காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2016 --
இணைய தளம் வழியே 29.12.2015 முதல் விண்ணப்பிக்கலாம் ..

Tuesday 8 December 2015

உடல் தானம் - ஜிப்மர் கடந்து வந்த பாதை ...

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளிகளின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி.

ஜிப்மர் மருத்துவமனை சாதாரண மக்களுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை மிக எளிதாகவும் சுலபமாக பெறக்கூடிய வகையில் வழங்கி வருகிறது. தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் கண் கருவிழி, சிறுநீரகங்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகிய உறுப்புக்களை மாற்றும் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கல்லீரல் மற்றும் ஏனைய பல்வகையான உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை தொடங்கப்படவுள்ளது.

புதுவையில் முதல்முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட  நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்று முதன்முதலாக மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது முதல் தற்போது வரை ஜிப்மர் மருத்துவமனையில் 19 குடும்பத்தினர்கள் தாமகவே முன்வந்து மூளைச்சாவு ஏற்பட்ட அவர்களது உறவினரிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம்  நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயினால் அவதியுற்ற 38  நோயாளிகள் சிறுநீரகங்களையும் , கண்பார்வையற்று அவதியுற்ற  பார்வையிழந்தோர் 38 பேர் கருவிழிகளையும் தானமாக பெற்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் முடிய ஜிப்மர் மருத்துவமனையில் 10 மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களும், திசுக்களும்  தானமாக பெறப்பட்டது.  மூளைச்சாவு
ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவினை குறிக்கும் விதமாகவும், உறுப்புக்களை தானமாக தருவதற்கு முன்வந்த குடும்பத்தினர்களை கௌரவிக்கும் விதமாகவும், இவ்வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவினரை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது ஜிப்மர் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 40 நோயாளிகளும்,  கருவிழி மாற்று அறுவை 17 நோயாளிகளும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 நோயளிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

http://jipmer.edu.in/departments/advanced-centers/transplantation-services/ என்ற ஜிப்மர்
இணையதளத்தின் மூலமாக இறந்த பிறகு உடல் உறுப்புக்களை தானமாக தருவதற்கு உறுதிமொழி வழங்கி “கொடையாளிக்கான அடையாள அட்டையினை” பெற்றுக்கொள்ளும் வசதியினை ஜிப்மர் மருத்துவமனை 2015 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது. இதுவரை 40 நபர்கள் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தருகிறேன் என உறுதிமொழி தந்து அதற்கான அடையாள அட்டையினை பெற்றுள்ளார்கள். மேலும் ஜிப்மர் மருத்துவமனையானது புதுவை அரசு மருத்துவமனை, புதுவை பிம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்துடன் (TRANSTAN) இணைந்து செயல்பட்டு பெறப்படும் உறுப்புக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு
நோயாளியிடமிருந்து ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்து  கல்லீரலை தானமாக பெற்று மதுரையில் ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது இதய வால்வுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் புதுவை பிம்ஸ் மருத்துவமனையில் ஒரு மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியிடமிருந்து உடல் உறுப்பு (சிறுநீரகம்) தானமாக பெற்று வழங்கப்பட்டு ஜிப்மரில் மருத்துவமனையில்   நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும்
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையானது “The JIPMER Deceased Donor Transplantation Committee (JDDTC)” யின் மேற்பார்வையில் நடைபெறுகிறது

ஜிப்மரில் உறுப்பு மாற்று அறுவையின் தற்போதைய புள்ளி விவரம்
கருவிழி மாற்று அறுவைச்சிகிச்சை:
ஜிப்மர் மருத்துவமனையில் கண்வங்கி செயல்படுகிறது. இங்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சையானது 1997ம் ஆண்டு முதல் செய்யப்படுகிறது. இதுவரையில் 510 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 74 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை:
ஜிப்மரில் மார்ச் 2012 ம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையில் 77 சிறுநீரங்கள் தானமாக பெறப்பட்டு சிறுநீரக நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை  மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.

வருடம் 2012 2013 2014 2015

மூளை சாவினால் உறுப்பு தானம் செய்த நோயாளிகளின் எண்ணிக்கை 0 2 7 10

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை 9 11 26 31

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை :

ஜிப்மர் மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 2014 ல் தொடங்கப்பட்டது.

புதுவையில் நமது ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரே அரசு சார்பு நிறுவனமும் இதுவே என்பது குறிப்பிட்த்தக்கது. இங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது வரை ஜிப்பரில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: ஆட்டோலோகஸ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 36
ஆலோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 06
தற்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை: 10

உடல் தானம் - ஜிப்மர் மருத்துவமனையின் ஈராண்டு சாதனை

Second anniversary of Deceased (Cadaver) Donor transplantation program and

felicitation of families of organ donors at JIPMER, Puducherry

                   Making organ transplantation accessible and affordable to the common man has been

a priority for JIPMER.  At present JIPMER is performing transplantation of Eyes, Kidneys

and bone marrow. JIPMER is the process of establishing a liver transplantation program and

a multi-organ transplantation program in the near future.

                  JIPMER has pioneered deceased donor transplantation in Puducherry and was the first

institution to start deceased donor organ harvesting and transplantation in Puducherry. The

first deceased (cadaver) donor organ harvesting and transplantation in Puducherry was

performed on 5th December 2013 at JIPMER. Since then, 19 families have come forward to

voluntarily donate organs of brain dead patients at JIPMER. So far 38 patients have received

kidneys from brain dead donors at JIPMER and 38 patients with blindness have received

corneal transplants from brain dead donors at JIPMER.

                  From January to November 2015, organs and tissues were harvested from 10 brain

dead donors at JIPMER. JIPMER is organizing a function to mark the second anniversary of

Deceased Donor Transplantation Program at JIPMER and to honor the families who came

forward to donate organs of brain dead patients at JIPMER as well as the deceased donor

transplantation team members.

                   JIPMER is providing transplantation operation free of cost to patients.

As of now, 40 patients are waiting for kidney transplantation, 17 Patients for eye

transplantation and 10 patients for bone marrow transplantation at JIPMER.

JIPMER provides option for pledging your organs for transplantation after death; this

can be done online on JIPMER website at: http://jipmer.edu.in/departments/advanced-

centers/transplantation-services/ . Those who are pledging their organs are being issued a

‘Donor Card’ by JIPMER.

                    Since this service was launched in March 2015, 40 individuals have pledged their

organs have been issued donor cards from JIPMER.

                    JIPMER also coordinated with the government of Puducherry, Pondicherry Institute of

Medical Sciences (PIMS) and the Transplantation Authority of Tamil Nadu (TRANSTAN)

in sharing of organs. A liver harvested from a brain dead donor at JIPMER was transplanted

in a patient at Madurai and Heart valves were sent to Chennai. A kidney donated by a brain

dead donor in PIMS was shared with JIPMER where it was transplanted to a patient with

kidney failure.

The JIPMER Deceased Donor Transplantation Committee (JDDTC) supervise the

deceased donor program at JIPMER.

Current status of Transplantation operations at JIPMER:

Corneal transplantation:

JIPMER is having an eye bank and has been performing eye (cornea) transplants since

the year 1997. So far 510 corneal transplantation were performed. In the last two years 74

has been performed at JIPMER since inception of deceased donor program.

Kidney Transplantation:

The kidney transplantation program at JIPMER was started in March 2012 and so far

77 kidney transplantation operations has been performed at JIPMER.

Year 2012 2013 2014 2015

Number of Brain dead donors

donating organs at JIPMER 0 2 7 10

Number of Kidney transplant

Operations performed 9 11 26 31

Bone marrow transplantation:

The bone marrow transplantation program at JIPMER was started in 2014.

JIPMER is the only hospital offering bone marrow transplantation services in Puducherry

and the only government institution offering the treatment in Tamil Nadu and Puducherry.

Bone marrow transplantation is being offered free of cost and under the Tamil Nadu Chief

Minister’s health insurance scheme at JIPMER.

Bone marrow transplantations performed till now at JIPMER:

Autologous bone marrow transplantation: 36

Allogenic bone marrow transplantation: 06

Ten patients are waiting for bone marrow transplantation at JIPMER at present.

அவசர அழைப்புக்கு ஜிப்மர் உதவக் காத்திருக்கிறது ...

DIAL JIPMER

9047590563

FOR EMERGENCY SERVICES 24X7

Under the leadership of Dr. S.C. Parija, Director, JIPMER, JIPMER has developed

24X7 Help line in Casualty for patients requiring Emergency Tele-Consultations. He said

that a team of Senior and Junior Doctor is given a Smartphone to attend any telephonic

call of a patient requiring emergency consultation. Doctor on duty will guide the patient

telephonically for immediate First Aid possible at the patient end to relive the distress of

the patient. If patient’s distress is relived then patient may be asked to come next day in

the concerned outpatient department advised by the Casualty Doctor. In case the distress

is not relieved, then patient is asked to come to the casualty of JIPMER as soon as

possible. Casualty Doctor will guide the patient mode of transportation, where to report

in the casualty of JIPMER, what all formalities will be done in JIPMER, whether old

records to be brought or not etc. In case of distance being very far from JIPMER Casualty

then Casualty Doctor may guide patient where to and which hospital to go nearby his/her

residence. Casualty Doctor on duty will record patient details including Name, Age,

Gender, Address, Contact Telephone Number, Ration care Number, Aadhaar Card

Number, PAN number and whatever relevant possible details available with patient.

He also added that those patients who have internet connection available in their

Mobile, Tablet, Laptop or Desktop, they can talk to JIPMER Casualty Doctor On Duty

by using Free Skype Software downloaded in their system. To call JIPMER through

skype Service the ID is “Casualty Desktop Telemedicine JIPMER” or “Casualty

Mobile Telemedicine JIPMER”. Using this Skype Services patient can see the JIPMER

Doctor and can talk to the doctor Live. Patient can show his/her injuries to the Casualty

Doctor to get the advice. JIPMER strictly advices that General Enquiry will not be

entertained as this will be a hotline for emergency purpose only.

Saturday 28 November 2015

கடலூர் மக்களுக்கு தி ஹிந்து நாளிதழ் மூலம் உதவி

சமீபத்தில் கோரத்தாண்டவம் ஆடிய மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொதுமக்களிடமிருந்து "தி ஹிந்து" தமிழ் நாளிதழ் கேஸ் ஸ்டவ், பாய், போர்வை, பனியன் போன்றவற்றை நன்கொடையாக கேட்டு வாங்கி நேரிடையாக கடலூருக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகிறது. தி ஹிந்து நாளிதழின் இப்பணிக்கு உதவுகிற வகையில் இப்பொருட்களை இலவசமாக கொண்டு சேர்க்கும் பணியினை கே.பி.என் டிராவல்ஸ் செய்து வருகிறது. நானும் பி.எஸ்.என்.எல்-லில் பணி புரியும் எனது நண்பர்கள் டி.மனோகரன், ஜி.முருகேசன், ஆர்.ராஜசேகர், ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர்கள் சேர்ந்து நன்கொடை வசூலித்து அந்தத் தொகையில் 20 போர்வைகளையும், நானும் என் நண்பர் ஏ.இளங்கோவன், வை.கண்ணம்மாள் (அம்மா சமூக சேவா மையம்) சார்பில் 15 லுங்கிகளையும் நேற்று 27.11.2015 வெள்ளிக்கிழமை புதுச்சேரி கே.பி.என். டிராவல்ஸ் அலுவலகத்தில் மேலாளர் வசம் ஒப்ப்டைத்தோம். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கும், கே.பி.என்.டிராவல்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி ..

Saturday 21 November 2015

ஜிப்மரில் ஆஸ்த்துமா நோய்க்கான கருத்தரங்கு

ஜிப்மர் மருத்துவமனையில் 24.11.2015 ஆஸ்த்துமா நோய் குறித்த கருத்தரங்கம் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது . ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Sub: JIPMER – “HEALTH EDUCATION FOR ALL” – on 24th November 2015 – Reg.
********
I am glad to inform you that JIPMER has initiated Public Education Campaigns on various medical conditions at JIPMER for public, patients and staff. This month topic on “Asthma and Chronic Obstructive Pulmonary Disease (COPD)” is scheduled on 24th November 2015 at Super Specialty Block (SSB), Conference Hall, JIPMER between 03:00 P.M to 05:00 P.M.
Various medical experts will conduct this section where public, patients and staffs are expected to participate.

Sunday 15 November 2015

BSNL நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டெண்ட் வேலை..

SPECIAL RECRUITMENT DRIVER FOR SC / ST AND OBC CANDIDATES IN POSTS OF TTA IN BSNL FROM EXTERNAL CANDIDATES -
STARTING OF ON LINE REGISTRATION OF APPLICATION 01.12.2015
LAST DATE OF ON LINE REGISTRATION : 10.12.2015
DATE OF WRITTEN TEST : 20.12.2015
PAY BAND : 13600-25420 with annual increment at 3% of basic pay plus IDA, HRA, PERKS, MEDICAL BENEFITS ETC.,
QFN : THREE YEARS ENGINEERING DIPLOMA IN ANY OF THE FOLLOWING DISCIPLINES 1. TELECOMMUNICATIONS 2. ELECTRONIC 3. ELECTRICAL 4. RADIO 5. COMPUTER 6.INSTRUMENTS 7 INFORMATION TECHNOLOGY OR B.SC (ELECTRONICS)
DETAILS OF VACANCY POSITION, AGE WITH RELAXATION CONDITIONS, SCHEME OF EXAMINATION CAN BE SEEN OR DOWNLOADED FROM BSNL.CO.IN/OPENCMS/bsnl/BSNL ...

Thursday 5 November 2015

ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம்

ஜிப்மர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை 06.11.2015 கருத்தரங்கக் கூடத்தில் மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று அரிய பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்கள் இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
"JIPMER has initiated Public Education Campaigns on various medical conditions at JIPMER for public, patients and staff. This month topic on “DENGUE PREVENTION” is scheduled on 06th November 2015 at Main Auditorium, JIPMER between 02:00 P.M to 04:30 P.M.
Various medical experts will conduct this section where school and college students, public, patients and staffs are expected to participate.
A special skit by Asiriya kalai kuzhu, Puducherry will do a stage drama on Dengue.

Tuesday 3 November 2015

திரு.மு.வைத்தியாநாதனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று 03.11.2015 செவ்வாய்க்கிழமை பிறந்த நாள் காணும் அன்பிற்கினிய நண்பரும் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பின்ருமாகிய திரு மு.வைத்தியநாதன் எதிர்கால வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைந்திட வாழ்த்துக்கள் ...
"பதவியில் இல்லாததால் தகுதியில்லாதவர் என்று பொருளில்லை ;
பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் தகுதியானவர்களும் இல்லை;
..காலம் பதில் சொல்லும் ...



 இனிய வணக்கம் ......


Saturday 31 October 2015

RECTT T.G.T IN TAMIL/HINDI/ARABIC IN GOVT SCHOOLS IN PUDUCHERRY

RECRUITMENT - POSTS OF TRAINING GRADUATE TEACHER IN TAMIL / IN HINDI / IN ARABIC IN GOVERNMENT SCHOOLS IN PUDUCHERRY AND KARAIKAL REGIONS 2015 - NO OS VACANCIES UR 32 / OBC 20 / SC 9 (VERTICAL RESERVATION) AND DAP 2 HORIZONTAL RESERVATION - NO OF VACANCIES TAMIL 58 (GEN 30 OBC 19 SC 9 DAP 2) 
HINDI 2 (GEN 1 OBC 1) ARABIC 1 (GEN 1 ) - ELIGIBILITY AGE NOT EXCEEDING 30 YEARS AS ON 30.11.2015 - LAST DATE 30.11.2015 - AGE LIMIT IS RELATION IN ACCORDANCE WITH INSTRUCTIONS / ORDERSISSUED BY THE GOVERNMENT OF INDIA FROM TIME TO TIME . FOR GOVERNMENT SERVANTS UP TO FIVE YEARS - QFN - I (1) TGT IN TAMIL : BACHELORS DEGREE IN TAMIL (2) TGT IN HINDI - BACHELORS DEGREE IN HINDI (3) TGT IN ARABIC : BACHELORS DEGREE IN ARABIC
II B.ED OR B.T OF ANY RECOGNIZED UNIVERSITY
III SHOULD HAVE STUDIED PARTICULARS REGIONAL LANGUAGE (TAMIL) AS ONE OF THE SUBJECT IN THE SECONDARY LEVEL - APPLICANT SHOULD HAVE OBTAINED THE MINIMUM QUALIFYING MARKS IN CTET / TNET AS BELOW : (1) GENERAL CATEGORY 60% (90 MARKS) (2) OBC/MBC/EBC/BCM : 55% (82 MARKS) (3) SCHEDULED CASTE 50% (75 MARKS) (4) DIFFERENTLY ABLED PERSONS 50% (75 MARKS) - APPLICATION CAN BE DOWNLOADED FROM WEBSITEHTTP://WWW.PY.GOV.IN ORHTTP://SCHOOLEDN.PUDUCHERRY.GOVT.IN --
BEST OF LUCK

RECRUITMENT - STAFF NURSE - PUDUCHERRIANS ONLY

RECRUITMENTS - INDIAN CITIZENS WHO ARE NATIVES / RESIDENTS OF UNION TERRITORY OF PUDUCHERRY - POSTS OF STAFF NURSE BY DIRECT RECRUITMENT- NO OF POSTS 21 - UR 11 - OBC 07 - SC 03 - REGION YANAM - SHOULD HAVE STUDIED TELEGU - QFN : PASS IN HSC, DEGREE OR DIPLOMA IN GENERAL NURSING AND MIDWIFERY / PSYCHIATRIC NURSING OR ITS EQUIVALENT / REGISTRATION AS A NURSE AND MIDWIFE OR EQUIVALENT IN ANY STATE NURSING COUNCIL IN INDIA - AGE BETWEEN 18-32 AS ON 27.11.2015 - LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATION IS 27.11.2015 - AGE RELAXATION OBC 3 YEARS / SC 5 YEARS / DIFFERENT ABLED PERSON 10 YEARS / WIDOWS 5 YEARS - APPLICATION CAN BE DOWNLOADED FROM HTTP"//HEALTH.PUDUCHERRY.GOV.IN .. BEST WISHES

Monday 12 October 2015

பரதநாட்டிய நிகழ்ச்சி - புதுச்சேரி கடற்கரையில் ...

அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரையில் 12.10.2015 இரவு நடைபெற்றது. பங்கேற்ற மாணவிகளுக்கு சேர்மன் திரு பாலமுருகன் சான்றிதழ் வழங்கினார்.













Sunday 4 October 2015

ஆதிதிராவிட மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி, வேட்டி,சேலை

புதுச்சேரியில் வாழும் அனைத்து ஆதிதிராவிட மக்களுக்கும் இலவசமாக மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை பெறுவதற்கான கூப்பன்கள் 07.10.2015 முதல் அங்கன்வாடிகள் மூலம் வழங்கப்படவுள்ளது. கூப்பன்கள் பெற வருவோர் குடும்ப உணவுப்பங்கீட்டு அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதிதிராவிட இனத்தவருக்கான சாதி சான்றிதழ் (பழையது போதுமானது) காண்பித்து, அலுவலக முத்திரை பதித்து கூப்பனங்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை நலம் மற்றும் சுற்றுலா அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில் கண்ணி வழியே முன்பதிவு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை 50 ஆண்டு கால பழமையானது. இந்த மருத்துவமனை புதுச்சேரியில் இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா மமுழுவதிலிருந்து இங்கு தினமும் 8,000 முதல் 9,000 மக்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற வருகிறார்கள். அதுவும் புற நோயாளிகள் பிரிவில் அட்டை போட்டு மருத்துவரை பார்ப்பதற்குள் மணி 2 ஆகி விடும். இந்த சிரமங்களைக் கண்டறிந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது இணைய தள வழியே முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை 02.10.2015 முதல் அறிமுகபடுத்தியுள்ளது. இதனால் நேரமும் காலமும் மிச்சம். இனி http://jipmer.edu.in என்ற இணைய தள முகவரிக்குச் செல்லுங்கள் .. சிகிச்சை பெற விரும்பும் தேதி மற்றும் துறையைத் தேர்த்தெடுங்கள் .. தங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டதை குறுஞ்செய்தி மூலம் கிடைக்கப் பெறுவீர்கள் .. வாழ்த்துக்கள் ஜிப்மர் நிர்வாகம் ..

Monday 28 September 2015

அம்மா சமூக சேவா மைய 9ஆம் ஆண்டு புகைப்படங்கள்

அம்மா சமூக சேவா மைய 9ஆம் ஆண்டு புகைப்படங்கள்







9ஆம் ஆண்டு விழா - அம்மா சாதனையாளர் விருது

அம்மா சாதனையாளர் விருது 2015 பெற்ற சிறப்புக்குரியவர்கள்
அம்மா சமூக சேவாமையத்தின் 9 வது ஆண்டு தொடக்க விழாவில் சாதனையாளர் விருது பெற்றோர் .. திரு.அறிவழகன் (கோயமுத்தூர்), மரு.அப்துல் ரஹீம் (கோயமுத்தூர்), திரு.சரவணன் (ஆரண்யா கானகம், பூத்துறை), திரு.புண்ணியமூர்த்தி (கரந்தை, தஞ்சாவூர்), டாக்டர் புண்ணியமூர்த்தி (பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்), மரு.க.கோ.மணிவாசகம் (தேவூர்), மரு.தணிகாசலம் (காங்கேயம்), மரு.நத்தம் மீரான் (திண்டுக்கல்) இவர்களுடன் சிறப்பு விருந்தினர் திரு.எம்.கே.இராமன் ((Director Medical Services, Puducherry)














Wednesday 23 September 2015

27.09.2015 ஒன்பதாம் ஆண்டு நிகழ்ச்சி நிரல்

சிறுதானியங்கள் உண்போம் ..                                   சிறப்பாய் வாழ்வோம்..
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவு எண் 822/2007)
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, (செளடாம்பிகையம்மன் கோவில் பின்புறம்), முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
தொடர்புக்கு : 0413-2235577 / 9443601439 / 9443801439 / 9443467945
மற்றும்
பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம்
புதுச்சேரி

அம்மா சமூக சேவா மையம் – ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா,
சித்தர் இலக்கியம்
மற்றும்
இயற்கை உணவுத் திருவிழா – 2015
நாள் : 27.09.2015 – ஞாயிற்றுக்கிழமை
இடம் : கருத்தரங்கக் கூடம், விவேகானந்தா மேனிலைப்பள்ளி,               
                     இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
(புதுச்சேரி பேருந்தி நிலையத்திலிருந்து கோரிமேடு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இலாசுப்பேட்டை ஐயனார் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வந்து விடலாம்)
              அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

மு.வைத்தியநாதன்
விழாக்குழுத் தலைவர் – இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
ஏ.இளங்கோவன்        கொ.இரா.இரவிச்சந்திரன்            வை.கண்ணம்மாள்
தலைவர்                       செயலாளர்                பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்
·        மூலிகைக் கண்காட்சி * இயற்கை உணவுக் கண்காட்சி * சித்த மருத்துவ கருத்தரங்கம் * இலவச வர்ம வைத்தியப் பயிற்சி * கலை நிகழ்ச்சிகள்













வர்மம் கற்போம் ..                                  வலிமை சேர்ப்போம்

காலை 9.30 மணி :
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : திருமதி.சண்முகப்ரியா
மூலிகைகள் இயற்கை உணவுக் கண்காட்சி தொடங்கி வைத்தல் :
திருமிகு. இராஜவேலு
(சமூக நலத்துறை அமைச்சர் – புதுச்சேரி அரசு)
சித்த மருத்துவ கருத்தரங்கு மற்றும் இலவச வர்ம வைத்தியப் பயிற்சி :
விழாக்குழு தலைவர் உரை:
திரு.மு.வைத்தியநாதன்
இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் – புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர்.
   
கருத்தரங்கத் தொடக்கவுரை :
“சித்தர்கள் காட்டும் சிறப்பான வாழ்க்கை நெறிகள் “
முனைவர்.பேரா.வெ.கோபால்
(கல்விப்பதிவாளர், அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், புதுச்சேரி)
கருத்தரங்க தலைமையுரை :
அரிமா.யோகா.மரு.க.கோ.மணிவாசகம்
(பொதுச்செயலாளர், தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், தேவூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

வாழ்த்துரை :
திரு.மாசிலாமணி, புதுச்சேரி

அம்மா சாதனையாளர் விருது – 2015 வழங்கி சிறப்புரை :
மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்
திருமிகு.ந.அரங்கசாமி அவர்கள்
புதுச்சேரி அரசு, புதுச்சேரி

சாதனையாளர் விருது பெறும் மதிப்பிற்குரியோர் :
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம்
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச் செண்டர், கோயமுத்தூர்
திரு.தே.சரவணன்
ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம், பூத்துறை, ஆரோவில்
நத்தம் மரு.முகம்மது மீரான் -
திண்டுக்கல்
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவ - கரந்தை, தஞ்சாவூர்

எங்கும் பச்சிலைத் தோட்டம்…                       என்றும் உடல் ஊட்டம்…
மரு.என்.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
முனைவர்.அரிமளம் பத்மநாபன்
தமிழறிஞர், புதுச்சேரி
கருத்தரங்கு
“ரசவாதமும் சித்த மருத்துவமும்”
மரு.ஜி.டி.அப்துல் ரஹீம்,
ஆர்கனிக் ஹெர்பல் ரிசர்ச் செண்டர், கோயமுத்தூர்
“வனவளமும், சூழல் பாதுகாப்பும்
திரு.தே.சரவணன்,
நிர்வாகி, ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம், பூத்துறை, ஆரோவில்
“வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்போம்”
தேசீய நல்லாசிரியர்.கலைமாமணி. க.சீ.இராமநாதன்,
நிறுவனர், சூற்றுச் சூழல் கல்விக்கழகம், புதுச்சேரி.
“தீராத நோய்களைக் குணப்படுத்தும் மூலிகைச் சாறு மருத்துவம்
நத்தம்.மரு.மொஹம்மது மீரான், M.D. (AM)
 அல் ஷிபா ஆல்டர்னேடிவ் மெடிக்கல் செண்டர் - திண்டுக்கல்.
“எந்த வயதிற்கும் ஏற்ற யோகா”
யோகி.பேரா.மரு.வி.ஆர்.அறிவழகன்,
ஆசிரியர், ஆனந்தயோகம், கோயமுத்தூர்.
 “கால்நடை மூலிகைகள்”
மரு.புண்ணியமூர்த்தி,
தலைவர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழக மரபுசார் மூலிகைப் பிரிவு, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்
“புற்றுநோய் காரணங்களும், மருந்துகளும்”
மரு.புண்ணியமூர்த்தி,
பாரம்பரிய சித்த மருத்துவர் - கரந்தை, தஞ்சாவூர்
இயற்கை உணவு இடைவேளை
வழங்குபவர்கள் : செல்வி.ஓவியா குடும்பத்தினர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி

மதியம் 2.30 மணி
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : திருமதி.கவிதாகுமார்
நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிறப்புரை :
டாக்டர்.கே.வி.ராமன்
(Director, H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry)
பட்டிமன்றம் :
நடுவர்
சித்தரடியார்.மரு.மு.தணிகாசலம்,
இயக்கத் தலைவர், தமிழ்ப்பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கம், காங்கேயம்
“நோய்களைக் குணமாக்குவதில் முதலிடம் வகிப்பது”
விருந்தே                                                       மருந்தே
மரு.ரகு, திருவையாறு                          மரு.பழனிவேல், திருஇந்தாளூர்.
மரு.செரீப், மன்னார்குடி                         மரு.ஜெயகிருஷ்ணா, லக்கடிப்பட்டி

“சித்தர்களின் தத்துவம்”
மரு.ஆர்.முத்தரசன்,
இயக்குநர், சித்த மருத்துவ குருகுலம், மதுரை.
“சோரியாசிஸ்”
மரு.ஓம் சக்தி பெருமாள், சென்னை.
“பக்கவாதம்”
மரு.கருணாமூர்த்தி, திருவண்ணாமலை
“சித்த மருத்துவமும், தேங்காய் மகாத்மியமும்”
மரு.சித்தி விநாயகம், - புதுச்சேரி

மாலை 5 மணி :
நிகழ்வில் பங்கேற்ற சித்த மருத்துவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குபவர் :
திருமிகு.என்.ஜி.பன்னீர்செல்வம்
உள்ளாட்சி அமைச்சர், புதுச்சேரி அரசு, புதுச்சேரி.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகள்
மாலை 5.30 மணி
நிகழ்வினைத் தொகுத்து வழங்குபவர் : செல்வி.ரிக்த்து, புதுச்சேரி.
“தகவல் பெறும் உரிமைச் சட்டம்” - சிறுநூல் வெளியீடு மற்றும் கலைநிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை :
திருமிகு.க.இலட்சுமிநாராயணன்,
சட்டமன்ற உறுப்பினர், புதுச்சேரி.
வாழ்த்துரை :
திரு.ஜி.கோபிநாத்
முதுநிலை கணக்கு அதிகாரி, நலவழித்துறை, புதுச்சேரி
திரு.எம்.சண்முகமணி,
துணைப் பொதுமேலாளர், பி.எஸ்.என்.எல் (ஓய்வு), புதுச்சேரி
மாலை 0600 மணி யோகா
செல்வி.எஸ்.ரூபஸ்ரீ
செல்வி.எஸ்.திவ்யலட்சுமி
செல்வன்.எம்.தானேஸ்வர் 
மாலை 6.30 மணி
வாய்ப்பாட்டு நிகழ்ச்சி
வாய்ப்பாட்டு : ஸ்ரீ.வில்லிபுத்தூர் திருமதி.கே.விஜியலட்சுமி,
அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி
வயலின் : கோயமுத்தூர் எஸ். உஷா
அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி
மிருதங்கம் : திரு.கே.வி.வசந்தராஜா
இரவு 7.30 மணி :
பரதநாட்டியம்
குரு.செல்வி கிருத்திகா ரவிச்சந்திரன்
பங்கேற்கும் மாணவிகள்
செல்வி.சி.விசாலி                            செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா
செல்வி.ஏ.பத்மலதா                          செல்வி.வி.யமுனா
செல்வி.பி.பாக்யலட்சுமி                      செல்வி.எஸ்.லாவண்யா
செல்வி.    ரம்யா                           செல்வி.எம்.பூஜா
செல்வி.   ரோஷிகா                          செல்வி.ஆர்.மர்ஷினி
செல்வி.ஆர்.ஹரிணி                         செல்வி.சி.மாதங்கி
செல்வி.யு.மித்ராட்சயா                       செல்வி.கலைவாணி
செல்வி.தனலட்சுமி                           செல்வி.ஹேமவர்ஷினி
செல்வி.கெளசல்யா                          செல்வி.கே.ஷ்ருதி

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசு வழங்கிச் சிறப்புரை :
திருமிகு.டி.தியாகராஜன்
(கலை பண்பாட்டுத்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு, புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள், பொருளாளர், அம்மா சமூக சேவா மையம்

விழாக்குழு உறுப்பினர்கள் :
மரு.எஸ்.சித்தி விநாயகம்                          மரு.ஜே.வரதராஜன்
மரு.எம்.ஒய்.மொஹம்மது பாரூக்                    மரு.பி.மூர்த்தி
மரு.வீ.கோகுலகிருஷ்ணன்                         மரு.ஆர்.கணபதி
மரு.எஸ்.கணேசன்                                 மரு.ஆர்.சுந்தரராஜ்
மரு.ஜா.பாலகிருஷ்ணன்                                மரு.எஸ்.அரிகிருஷ்ணன்
அம்மா சமூக சேவா மைய நிகழ்வுச் செய்திகளையும் புகைப்படங்களையும்
ammaravi.blogspot.in
புதுவைப்பரணி இலக்கிய இதழின் படங்களையும், செய்திகளையும்
puduvaipparani.blogspot.in
சித்தமருத்துவச் செய்திகளையும், புகைப்படங்களையும்
puducherrysiddhamaruthuvam.blogspot.in
கண்டு களியுங்கள்
    அம்மா சமூக சேவா மையத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டம் விதி 80-ஜி (5) (vi)      படி வருமான வரிவிலக்கு உண்டு. புதுச்சேரி வருமான வரித்துறை ஆணையர் உத்திரவு எண். C.No.9165E (1289)/CIT/PDY/2010-11 dated 13.10.2010.
தங்களை அன்புடன் வரவேற்று மகிழும்

ஏ.இளங்கோவன்        கொ.இரா.இரவிச்சந்திரன்       வை.கண்ணம்மாள் தலைவர்                          செயலாளர்                  பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்