Tuesday 8 December 2015

உடல் தானம் - ஜிப்மர் கடந்து வந்த பாதை ...

புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளிகளின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி.

ஜிப்மர் மருத்துவமனை சாதாரண மக்களுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை மிக எளிதாகவும் சுலபமாக பெறக்கூடிய வகையில் வழங்கி வருகிறது. தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் கண் கருவிழி, சிறுநீரகங்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகிய உறுப்புக்களை மாற்றும் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கல்லீரல் மற்றும் ஏனைய பல்வகையான உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை தொடங்கப்படவுள்ளது.

புதுவையில் முதல்முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட  நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்று முதன்முதலாக மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது முதல் தற்போது வரை ஜிப்மர் மருத்துவமனையில் 19 குடும்பத்தினர்கள் தாமகவே முன்வந்து மூளைச்சாவு ஏற்பட்ட அவர்களது உறவினரிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம்  நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயினால் அவதியுற்ற 38  நோயாளிகள் சிறுநீரகங்களையும் , கண்பார்வையற்று அவதியுற்ற  பார்வையிழந்தோர் 38 பேர் கருவிழிகளையும் தானமாக பெற்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் முடிய ஜிப்மர் மருத்துவமனையில் 10 மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களும், திசுக்களும்  தானமாக பெறப்பட்டது.  மூளைச்சாவு
ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவினை குறிக்கும் விதமாகவும், உறுப்புக்களை தானமாக தருவதற்கு முன்வந்த குடும்பத்தினர்களை கௌரவிக்கும் விதமாகவும், இவ்வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவினரை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது ஜிப்மர் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 40 நோயாளிகளும்,  கருவிழி மாற்று அறுவை 17 நோயாளிகளும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 நோயளிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

http://jipmer.edu.in/departments/advanced-centers/transplantation-services/ என்ற ஜிப்மர்
இணையதளத்தின் மூலமாக இறந்த பிறகு உடல் உறுப்புக்களை தானமாக தருவதற்கு உறுதிமொழி வழங்கி “கொடையாளிக்கான அடையாள அட்டையினை” பெற்றுக்கொள்ளும் வசதியினை ஜிப்மர் மருத்துவமனை 2015 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது. இதுவரை 40 நபர்கள் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தருகிறேன் என உறுதிமொழி தந்து அதற்கான அடையாள அட்டையினை பெற்றுள்ளார்கள். மேலும் ஜிப்மர் மருத்துவமனையானது புதுவை அரசு மருத்துவமனை, புதுவை பிம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்துடன் (TRANSTAN) இணைந்து செயல்பட்டு பெறப்படும் உறுப்புக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு
நோயாளியிடமிருந்து ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்து  கல்லீரலை தானமாக பெற்று மதுரையில் ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது இதய வால்வுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் புதுவை பிம்ஸ் மருத்துவமனையில் ஒரு மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியிடமிருந்து உடல் உறுப்பு (சிறுநீரகம்) தானமாக பெற்று வழங்கப்பட்டு ஜிப்மரில் மருத்துவமனையில்   நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும்
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையானது “The JIPMER Deceased Donor Transplantation Committee (JDDTC)” யின் மேற்பார்வையில் நடைபெறுகிறது

ஜிப்மரில் உறுப்பு மாற்று அறுவையின் தற்போதைய புள்ளி விவரம்
கருவிழி மாற்று அறுவைச்சிகிச்சை:
ஜிப்மர் மருத்துவமனையில் கண்வங்கி செயல்படுகிறது. இங்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சையானது 1997ம் ஆண்டு முதல் செய்யப்படுகிறது. இதுவரையில் 510 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 74 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை:
ஜிப்மரில் மார்ச் 2012 ம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையில் 77 சிறுநீரங்கள் தானமாக பெறப்பட்டு சிறுநீரக நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை  மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.

வருடம் 2012 2013 2014 2015

மூளை சாவினால் உறுப்பு தானம் செய்த நோயாளிகளின் எண்ணிக்கை 0 2 7 10

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை 9 11 26 31

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை :

ஜிப்மர் மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 2014 ல் தொடங்கப்பட்டது.

புதுவையில் நமது ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரே அரசு சார்பு நிறுவனமும் இதுவே என்பது குறிப்பிட்த்தக்கது. இங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது வரை ஜிப்பரில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: ஆட்டோலோகஸ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 36
ஆலோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 06
தற்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை: 10

No comments:

Post a Comment