Sunday, 24 April 2016

உலக சித்தா தினம் - 01.05.2016

அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவெண் 822/2007)
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
உலக சித்தா தினம் – 2016
நாள் : 01.05.2016 – ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரை
இடம் : குறிஞ்சி நகர் நலவாழ்வுச் சங்கக் கட்டிடம், வலம்புரி விநாயகர் கோவில் வளாகம், குறிஞ்சி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
(புதுச்சேரியிலிருந்து கோரிமேடு செல்லும் நகரப் பேருந்தில் பொன்னியம்மன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்து விடலாம்)
தலைமை : மரு.க.கோ.மணிவாசகம், தேவூர் (நாகை மாவட்டம்)
        முன்னிலை : திரு.ஏ.இளங்கோவன், தலைவர், அம்மா சமூக சேவா மையம்          
                     மரு.கருணாகரன், கொல்லிமலை
வரவேற்புரை : மரு.கொ.இரா.இரவிச்சந்திரன், செயலாளர், அம்மா சமூக சேவா மையம்
தொடக்கவுரை : டாக்டர்.கோபால்
முதல்வர், அன்னை தெரசா செவிலியர் கல்லூரி, புதுச்சேரி.
கருத்தரங்கம் :
“போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி ?”
மரு.வீ.ஆர்.சோழராஜன், பரங்கிப்பேட்டை
“கோடையைத் தகர்க்கும் தரமான உணவுகள்”
மரு.எம்.புண்ணியமூர்த்தி, கரந்தை, தஞ்சாவூர்
“சித்த மருத்துவத்தின் பார்வையில் சர்க்கரை நோய்”
மரு.ரகு, திருவையாறு
“சிறுநீரகக் கல்”
மரு.சந்திரசேகரன், பண்ருட்டி
“கோடைகால நோய்களும், அதற்குரிய சித்த மருத்துவ மருந்துகளும்”
மரு.சித்தி விநாயகம், புதுச்சேரி.
“உயிர் காக்கும் வர்மம்”
வர்ம ஆசான்.அ.சந்திரன், பெரம்பலூர்.

நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள், பொருளாளர், அம்மா சமூக சேவா மையம்

             பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

ஏ.இளங்கோவன்           கொ.இரா.இரவிச்சந்திரன்      வை.கண்ணம்மாள்  
தலைவர் – 9443467945         செயலாளர் – 9443601439     பொருளாளர் - 9443801439 
உள்ளம்  பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ள புலனைந்துங் காளா மணிவிளக்கே
-    திருமூலர்.

உலக சித்தா தினம் – கலை நிகழ்ச்சிகள்

நாள் : 01.05.2016 – ஞாயிற்றுக்கிழமை - மாலை 6 மணி
இடம் : குறிஞ்சி நகர் நலவாழ்வுக் கூடம், குறிஞ்சி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி

வாய்ப்பாட்டு : குரு.ஷண்முகப்ரியா
செல்வி.ஏ.அற்புதா, செல்வி.கே.எஸ்.ஜெயவர்ஷினி, செல்வன்.பி.ஜே.தேஜஸ்ரூபன், செல்வி.ஸ்ரீவிஷ்ணுப்ரியா

வீணை : செல்வி.ஹம்சவேணி

பரதநாட்டியம் : செல்வி.சி.நிவேதிதா, மூலக்குளம்

யோகா : செல்வன்.எம்.தானேஸ்வர்

புதுவை ஆழி குழந்தைகள் நாடகக்குழு வழங்கும்
வேலு சரவணனின் “கடல் பூதம்”
(குழந்தைகளுக்கான நாடகம்).

பரத நாட்டியம் : குரு.செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
மாணவிகள் :
செல்வி.எம்.நித்யஸ்ரீ, செல்வி.இரா.நந்தினி, செல்வி.சு.ஷர்வினி, செல்வி.ச.ரத்திகாலட்சுமி, செல்வி.இரா.ஹரிணி, செல்வி.மு.கெளசல்யா, செல்வி.மு.பூஜா, செல்வி.உ.மித்ராட்சயா, செல்வி.இரா.மர்ஷினி, செல்வி.மு.கலைவாணி, செல்வி.இரா.ரோஷிகா, செல்வி.ச.மாதங்கி, செல்வி.கா.ஷ்ருதி, செல்வி.ச.ராஜேஸ்வரி, செல்வி.கி.தனலட்சுமி, செல்வி.பா.பாக்யலட்சுமி, செல்வி.ச.லாவண்யா, செல்வி.இரா.ஹேமஸ்ருதிகா.

வாழ்த்துரை :
திரு.கோபிநாத், (முதுநிலை கணக்கு அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி.
மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை :
டாக்டர்.கே.வி.ராமன்
(Director, H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry)

நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள்,
              பொருளாளர், அம்மா சமூக சேவா மையம்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பே வளர்த்தே உயிர் வளர்த்தேனே
n  திருமூலர்


Thursday, 10 March 2016

மகளிர் தின விழா 08.03.2016

அம்மா சமூக சேவா மையத்தில் மகளிர் தின விழா 08.03.2016 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
திரு.கோபிநாத் (மூத்த கணக்கு அதிகாரி )ஓய்வு) சமூகநலத்துறை, புதுச்சேரி) மற்றும் பேரா.இரா.ச.குழந்தைவேலனார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் பரிசுகள் வழங்கினார்கள்.












Friday, 4 March 2016

மகளிர் தினம் - 08.03.2016 மாலை 6.30 மணி - அம்மாவில்

அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது - பதிவு எண்.822/2007)
எண். 52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
தொலைபேசி : 0413-2235577 / 9443601439 – 9443467945 – 9443801439
E-mail : krravi62@gmail.com / view : ammaravi.blogspot.in

மகளிர் தின விழா
நாள் : 08.03.2016 – செவ்வாய்க்கிழமை – மாலை 0630 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம்

வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
தலைமையுரை : திரு.ஏ.இளங்கோவன்- தலைவர்

சிறப்புரை :
“மகளிர் நலனுக்கான திட்டங்களும், பயன்பாடுகளும்”
திருமதி.ஸ்டெல்லாமேரி
(பாதுகாப்பு அதிகாரி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி)
“வள்ளுவம் காட்டும் பெண்ணியம்”
பேரா.இரா.ச.குழந்தைவேலனார்
(தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்)
திரு.கோபிநாத்
(மூத்த கணக்கு அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி)

நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் – பொருளாளர்


“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே …
--மகாகவி பாரதியார்





Tuesday, 1 March 2016

திரு.கோபிநாத் பணி ஓய்வு பெற்றார் - 29.02.2016

என் அன்பிற்கினிய நண்பர் திரு.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி) சமூக நலத்துறை அவர்கள் 29.02.2016 அன்று பணி ஓய்வு பெற்றார். மிக நல்ல மனிதர் நல்ல அதிகாரியும் கூட. அதனாலேயே பலருக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். கையூட்டு பெறுவது தவறு என்று கறாராக இருந்தார். அதனாலேயே பணியிட மாற்றல் உள்பட பல பிரச்சினைகளைச் சந்தித்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வாய்மைக்குத் தான் எவ்வளவு சோதனை ...? அவரின் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ள பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் .. நிச்சயம் சாதிப்பார்.... அவருடன் நான், அம்மா சமூக சேவா மைய பொருளாளர் திருமதி.வை.கண்ணம்மால், தலைவர்.ஏ.இளங்கோவன், துணைவியார்.

Thursday, 28 January 2016

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்  சாதனைப் பெண் விருது பெற்ற
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
அவர்களுக்கு
பாராட்டுவிழா
நாள்  : 30.01.2016 – சனிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம், எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை,       
         முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர் – அ.ச.சே.மையம் தலைமை : திரு.ஏ.இளங்கோவன் – தலைவர் அ.ச.சே.மையம்
வாழ்த்துரை :
திரு.மு.வைத்தியநாதன்
(இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் – புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலர்)
திரு.க.இலட்சுமிநாராயணன்
(சட்டமன்ற உறுப்பினர் – முன்னாள் கல்வி அமைச்சர் )
தோழர்.தா.முருகன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி)
யோகாச்சாரி டாக்டர்
ஆனந்த பாலயோகி பவனானி
கவிஞர்.மீனாட்சி, ஆரோவில்

தோழர்.க.முருகன்                        தோழர்.சு.இராமச்சந்திரன்
(துணைப் பொதுச்செயலாளர் – CITU)                (மாநிலப் பொருளாளர்)
தோழர்.என்.கொளஞ்சியப்பன்
உதவித் தலைவர் (BSNL ஊழியர் சங்கம், புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் (பொருளாளர் – அ.ச.சே.மையம்)

இவர்களோடு சேர்ந்து வாழ்த்த உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்  
ஏ.இளங்கோவன்    கொ.இரா.இரவிச்சந்திரன்   வை.கண்ணம்மாள்
   தலைவர்                செயலாளர்                         பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்

              எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
---------------------------------------------
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
      மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு “பேஸ்புக்”- நிறுவனத்துடன் இணைந்து “100 சாதனைப் பெண்களை தேர்வு செய்யும்” திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று தொடங்கியது. பல்வேறு துறைகளில் இந்திய அளவில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய 100 சாதனைப் பெண்களை கண்டெடுத்து பாராட்டுவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.  முதல் கட்டமாக இத்தகைய பெருமைமிகு சாதனைகளை பல்வேறு துறைகளில் புரிந்து வரும் பெண்களை முன்மொழியும் பணி 15.07.2015 அன்று தொடங்கி 30.09.2015 அன்று நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கில் முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் பெறப்பட்டது.

      இரண்டாம் கட்டமாக அவ்வாறு பெறப்பட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 200 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண்களில் 100 பெண்களை இணையம் மூலமாக வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யும் முறை நவம்பர் 7, 2015 அன்று தொடங்கியது. வாக்கெடுப்பு நிறைவு பெற்ற நிலையில் தேர்வு செய்யப்பட்ட 100 பெண்களின் இறுதிப் பட்டியலை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த 01.01.2016 அன்று அறிவித்தது.

      செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரனுக்கு கலைத்துறையில் சிறப்பான சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் செரிமோனியல் அரங்கில் பாரதக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி அவர்கள் 22.01.2016 அன்று வழங்கினார்.
      செல்வி.கிருத்திகாவின் பரதநாட்டியப் பயிற்சி புதுச்சேரி பால் பவனில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, திரு.கிருஷ்ணன், திருமதி.சண்முகசுந்தரி,  ஆகியோரிடம் பரதம் கற்றார். திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு மாணவியாக இன்றும் பரதம் கற்று வருகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கனிணியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தில் பரதக் கலையில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டப் படிப்பினை முடித்துள்ளார். கனிணிப் பிரிவில் பாண்டிச்சேரி எஞ்ஜினியரிங்க் கல்லூரியில் (P.E.C) பகுதி நேர ஆய்வு மாணவியாக படித்து வருகிறார்.
      சைனாவில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று பிஜிங்க், ஷங்காய், நாஞ்ஜிங்க் ஆகிய இடங்களில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வியட்நாம் நாட்டில் ஆகிய இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சகள் நடத்தியுள்ளார். சமீபத்தில் அந்தமானின் போர்ட்பிளேயரில் நடைபெற்ற தீவுச் சுற்றுலா திருவிழாவில் (ISLAND TOURISM FESTIVAL – I.T.F) பங்கேற்று அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேசிய விருதுகளையும், சமூக, கலாச்சார அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் திருக்குறளின் பெருமையினை உலகுக்கு உணர்த்துவதற்காக மாபெரும் கின்னஸ் சாதனை நிகழ்வினை விரைவில் நடத்த உள்ளார்.
            செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி       அரசு               கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப்                          






பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.     

Monday, 25 January 2016

குடியரசு தின வாழ்த்துக்கள் - 26.01.2016

தியாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் ..
இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றுத் துளியிலும் அவர்களின் இரத்தம் கலந்திருக்கிறது ..
இந்தியக் குடியரசைப் பேணிக் காப்போம் .. அனைவருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள் ..



Thursday, 31 December 2015

LIBRARY AND INFORMATION ASSISTANT VACANCIES IN PUDUCHERRY

புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை புதுச்சேரியில் பணிபுரிய 53 LIBRARY AND INFORMATION ASSISTANT (GROUP B NON GAZETTED, NON MINISTERIAL) காலியிடங்களுக்கு மனுக்களைக் கோரியுள்ளது. கல்வித் தகுதி, வயது, இடஒதுக்கீடு போன்ற இது தொடர்பான முழு விவரங்களை http://art.puducherry.gov.in-ல் காணலாம். on line மூலமாக விண்ணப்பிக்க http://recruitment.puducherry.gov.in -ல் காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2016 --
இணைய தளம் வழியே 29.12.2015 முதல் விண்ணப்பிக்கலாம் ..