Thursday, 10 March 2016
Friday, 4 March 2016
மகளிர் தினம் - 08.03.2016 மாலை 6.30 மணி - அம்மாவில்
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளை
சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது - பதிவு எண்.822/2007)
எண். 52 செயிண்ட்
சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
தொலைபேசி
: 0413-2235577
/ 9443601439 – 9443467945 – 9443801439
E-mail : krravi62@gmail.com
/ view : ammaravi.blogspot.in
மகளிர் தின விழா
நாள் : 08.03.2016 – செவ்வாய்க்கிழமை – மாலை
0630 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம்
வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
தலைமையுரை : திரு.ஏ.இளங்கோவன்- தலைவர்
சிறப்புரை
:
“மகளிர் நலனுக்கான
திட்டங்களும், பயன்பாடுகளும்”
திருமதி.ஸ்டெல்லாமேரி
(பாதுகாப்பு
அதிகாரி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி)
“வள்ளுவம்
காட்டும் பெண்ணியம்”
பேரா.இரா.ச.குழந்தைவேலனார்
(தலைவர்,
கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்)
திரு.கோபிநாத்
(மூத்த கணக்கு
அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் – பொருளாளர்
“மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமை யைக்கொ
ளுத்துவோம்;
வைய வாழ்வு
தன்னில் எந்த
வகையி னும்ந
மக்குள்ளே
தாதர் என்ற
நிலைமை மாறி
ஆண்க ளோடு
பெண்களும்
சரிநி கர்ச
மான மாக
வாழ்வம் இந்த
நாட்டிலே …
--மகாகவி பாரதியார்—
Tuesday, 1 March 2016
திரு.கோபிநாத் பணி ஓய்வு பெற்றார் - 29.02.2016
என் அன்பிற்கினிய நண்பர் திரு.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி) சமூக நலத்துறை அவர்கள் 29.02.2016 அன்று பணி ஓய்வு பெற்றார். மிக நல்ல மனிதர் நல்ல அதிகாரியும் கூட. அதனாலேயே பலருக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். கையூட்டு பெறுவது தவறு என்று கறாராக இருந்தார். அதனாலேயே பணியிட மாற்றல் உள்பட பல பிரச்சினைகளைச் சந்தித்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வாய்மைக்குத் தான் எவ்வளவு சோதனை ...? அவரின் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ள பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் .. நிச்சயம் சாதிப்பார்.... அவருடன் நான், அம்மா சமூக சேவா மைய பொருளாளர் திருமதி.வை.கண்ணம்மால், தலைவர்.ஏ.இளங்கோவன், துணைவியார்.
Thursday, 28 January 2016
மத்திய அரசின் மகளிர் மற்றும்
குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாதனைப்
பெண் விருது பெற்ற
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
அவர்களுக்கு
பாராட்டுவிழா
நாள் : 30.01.2016 – சனிக்கிழமை மாலை 6.30 மணி
இடம்
: அம்மா சமூக சேவா மையம், எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
வரவேற்புரை
: திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
– அ.ச.சே.மையம் தலைமை : திரு.ஏ.இளங்கோவன்
– தலைவர் அ.ச.சே.மையம்
வாழ்த்துரை :
திரு.மு.வைத்தியநாதன் –
(இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் – புதுச்சேரி
முதல்வரின் பாராளுமன்றச் செயலர்)
திரு.க.இலட்சுமிநாராயணன்
(சட்டமன்ற உறுப்பினர் – முன்னாள் கல்வி அமைச்சர்
)
தோழர்.தா.முருகன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி)
யோகாச்சாரி டாக்டர்
ஆனந்த பாலயோகி பவனானி
கவிஞர்.மீனாட்சி, ஆரோவில்
தோழர்.க.முருகன் தோழர்.சு.இராமச்சந்திரன்
(துணைப்
பொதுச்செயலாளர் – CITU) (மாநிலப்
பொருளாளர்)
தோழர்.என்.கொளஞ்சியப்பன்
உதவித் தலைவர் (BSNL ஊழியர் சங்கம், புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் (பொருளாளர் – அ.ச.சே.மையம்)
இவர்களோடு சேர்ந்து வாழ்த்த உங்களையும் அன்புடன்
அழைக்கிறோம்
ஏ.இளங்கோவன் கொ.இரா.இரவிச்சந்திரன் வை.கண்ணம்மாள்
தலைவர் செயலாளர் பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
---------------------------------------------
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
மத்திய
அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு “பேஸ்புக்”- நிறுவனத்துடன்
இணைந்து “100 சாதனைப் பெண்களை தேர்வு
செய்யும்” திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று தொடங்கியது. பல்வேறு
துறைகளில் இந்திய அளவில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய 100 சாதனைப் பெண்களை கண்டெடுத்து பாராட்டுவது இந்த
திட்டத்தின் முக்கிய அம்சமாகும். முதல் கட்டமாக
இத்தகைய பெருமைமிகு சாதனைகளை பல்வேறு துறைகளில் புரிந்து வரும் பெண்களை முன்மொழியும்
பணி 15.07.2015 அன்று தொடங்கி 30.09.2015 அன்று நிறைவு பெற்றது.
ஆயிரக்கணக்கில் முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்
துறையால் பெறப்பட்டது.
இரண்டாம்
கட்டமாக அவ்வாறு பெறப்பட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 200 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பெண்களில் 100 பெண்களை இணையம் மூலமாக
வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யும் முறை நவம்பர் 7, 2015 அன்று தொடங்கியது. வாக்கெடுப்பு நிறைவு பெற்ற நிலையில் தேர்வு
செய்யப்பட்ட 100 பெண்களின் இறுதிப் பட்டியலை
மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த 01.01.2016 அன்று அறிவித்தது.
செல்வி.கிருத்திகா
ரவிச்சந்திரனுக்கு கலைத்துறையில் சிறப்பான சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார
மையத்தின் செரிமோனியல் அரங்கில் பாரதக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி
அவர்கள் 22.01.2016 அன்று வழங்கினார்.
செல்வி.கிருத்திகாவின்
பரதநாட்டியப் பயிற்சி புதுச்சேரி பால் பவனில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, திரு.கிருஷ்ணன்,
திருமதி.சண்முகசுந்தரி, ஆகியோரிடம் பரதம் கற்றார்.
திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு மாணவியாக இன்றும் பரதம்
கற்று வருகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி, பாரதிதாசன்
மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கனிணியில்
முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தில் பரதக்
கலையில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டப் படிப்பினை முடித்துள்ளார். கனிணிப் பிரிவில்
பாண்டிச்சேரி எஞ்ஜினியரிங்க் கல்லூரியில் (P.E.C) பகுதி நேர ஆய்வு மாணவியாக படித்து
வருகிறார்.
சைனாவில்
நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று பிஜிங்க், ஷங்காய், நாஞ்ஜிங்க் ஆகிய
இடங்களில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வியட்நாம் நாட்டில் ஆகிய இடங்களில்
பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரத நாட்டிய
நிகழ்ச்சகள் நடத்தியுள்ளார். சமீபத்தில் அந்தமானின் போர்ட்பிளேயரில் நடைபெற்ற தீவுச்
சுற்றுலா திருவிழாவில் (ISLAND TOURISM FESTIVAL – I.T.F) பங்கேற்று அந்தமான் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தேசிய விருதுகளையும், சமூக, கலாச்சார அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
மேலும் திருக்குறளின் பெருமையினை உலகுக்கு உணர்த்துவதற்காக மாபெரும் கின்னஸ் சாதனை
நிகழ்வினை விரைவில் நடத்த உள்ளார்.
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் புதுச்சேரி
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Monday, 25 January 2016
Thursday, 31 December 2015
LIBRARY AND INFORMATION ASSISTANT VACANCIES IN PUDUCHERRY
புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை புதுச்சேரியில் பணிபுரிய 53 LIBRARY AND INFORMATION ASSISTANT (GROUP B NON GAZETTED, NON MINISTERIAL) காலியிடங்களுக்கு மனுக்களைக் கோரியுள்ளது. கல்வித் தகுதி, வயது, இடஒதுக்கீடு போன்ற இது தொடர்பான முழு விவரங்களை http://art.puducherry.gov.in-ல் காணலாம். on line மூலமாக விண்ணப்பிக்க http://recruitment.puducherry.gov.in -ல் காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2016 --
இணைய தளம் வழியே 29.12.2015 முதல் விண்ணப்பிக்கலாம் ..
இணைய தளம் வழியே 29.12.2015 முதல் விண்ணப்பிக்கலாம் ..
Tuesday, 8 December 2015
உடல் தானம் - ஜிப்மர் கடந்து வந்த பாதை ...
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவு தினம் மற்றும் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளிகளின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி.
ஜிப்மர் மருத்துவமனை சாதாரண மக்களுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை மிக எளிதாகவும் சுலபமாக பெறக்கூடிய வகையில் வழங்கி வருகிறது. தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் கண் கருவிழி, சிறுநீரகங்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகிய உறுப்புக்களை மாற்றும் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கல்லீரல் மற்றும் ஏனைய பல்வகையான உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை தொடங்கப்படவுள்ளது.
புதுவையில் முதல்முறையாக ஜிப்மர் மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்று முதன்முதலாக மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது முதல் தற்போது வரை ஜிப்மர் மருத்துவமனையில் 19 குடும்பத்தினர்கள் தாமகவே முன்வந்து மூளைச்சாவு ஏற்பட்ட அவர்களது உறவினரிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயினால் அவதியுற்ற 38 நோயாளிகள் சிறுநீரகங்களையும் , கண்பார்வையற்று அவதியுற்ற பார்வையிழந்தோர் 38 பேர் கருவிழிகளையும் தானமாக பெற்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் முடிய ஜிப்மர் மருத்துவமனையில் 10 மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களும், திசுக்களும் தானமாக பெறப்பட்டது. மூளைச்சாவு
ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் இரண்டாமாண்டு நிறைவினை குறிக்கும் விதமாகவும், உறுப்புக்களை தானமாக தருவதற்கு முன்வந்த குடும்பத்தினர்களை கௌரவிக்கும் விதமாகவும், இவ்வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவினரை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது ஜிப்மர் மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 40 நோயாளிகளும், கருவிழி மாற்று அறுவை 17 நோயாளிகளும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக 10 நோயளிகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
http://jipmer.edu.in/departments/advanced-centers/transplantation-services/ என்ற ஜிப்மர்
இணையதளத்தின் மூலமாக இறந்த பிறகு உடல் உறுப்புக்களை தானமாக தருவதற்கு உறுதிமொழி வழங்கி “கொடையாளிக்கான அடையாள அட்டையினை” பெற்றுக்கொள்ளும் வசதியினை ஜிப்மர் மருத்துவமனை 2015 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகிறது. இதுவரை 40 நபர்கள் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தருகிறேன் என உறுதிமொழி தந்து அதற்கான அடையாள அட்டையினை பெற்றுள்ளார்கள். மேலும் ஜிப்மர் மருத்துவமனையானது புதுவை அரசு மருத்துவமனை, புதுவை பிம்ஸ் மருத்துவமனை மற்றும் தமிழக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்துடன் (TRANSTAN) இணைந்து செயல்பட்டு பெறப்படும் உறுப்புக்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு
நோயாளியிடமிருந்து ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்து கல்லீரலை தானமாக பெற்று மதுரையில் ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது இதய வால்வுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் புதுவை பிம்ஸ் மருத்துவமனையில் ஒரு மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியிடமிருந்து உடல் உறுப்பு (சிறுநீரகம்) தானமாக பெற்று வழங்கப்பட்டு ஜிப்மரில் மருத்துவமனையில் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புக்களை தானமாக பெற்று செய்யப்படும்
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையானது “The JIPMER Deceased Donor Transplantation Committee (JDDTC)” யின் மேற்பார்வையில் நடைபெறுகிறது
ஜிப்மரில் உறுப்பு மாற்று அறுவையின் தற்போதைய புள்ளி விவரம்
கருவிழி மாற்று அறுவைச்சிகிச்சை:
ஜிப்மர் மருத்துவமனையில் கண்வங்கி செயல்படுகிறது. இங்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சையானது 1997ம் ஆண்டு முதல் செய்யப்படுகிறது. இதுவரையில் 510 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 74 கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை:
ஜிப்மரில் மார்ச் 2012 ம் ஆண்டு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரையில் 77 சிறுநீரங்கள் தானமாக பெறப்பட்டு சிறுநீரக நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.
வருடம் 2012 2013 2014 2015
மூளை சாவினால் உறுப்பு தானம் செய்த நோயாளிகளின் எண்ணிக்கை 0 2 7 10
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை 9 11 26 31
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை :
ஜிப்மர் மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 2014 ல் தொடங்கப்பட்டது.
புதுவையில் நமது ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரே அரசு சார்பு நிறுவனமும் இதுவே என்பது குறிப்பிட்த்தக்கது. இங்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது. தற்போது வரை ஜிப்பரில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: ஆட்டோலோகஸ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 36
ஆலோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: 06
தற்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை: 10

Subscribe to:
Posts (Atom)