Thursday, 11 December 2014

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா - 2014

அம்மா சமூக சேவா மையம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா 2014 - 11.12.2014 வியாழன் மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதிய்லுள்ள சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

        திருமதி.வீ.கண்ணம்மாள் (பொருளாளர் – அம்மா சமூக சேவா மையம்) வரவேற்புரையாற்றினார். மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து அம்மா சமூக சேவா மைய மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக செல்வி.எம்.ஹேமவர்ஷினி, செல்வி.ஆர்.மர்ஷினி, செல்வி.எஸ்.ரூபஸ்ரீ ஆகியோரின் யோகா செயல்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

        அதனைத் தொடர்ந்து செல்வி.பி.பாக்யலட்சுமி, செல்வி.சி.விஷாலி, செல்வி.எம்.பூஜா, செல்வி.ஏ.பத்மலதா, செல்வி.வீ.யமுனா, செல்வி.கே.ஷ்ருதி, செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா, செல்வி.ஆர்.மர்ஷினி ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது .

        அதனைத் தொடர்ந்து பாரதியின் வாழ்வியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் திரு.ஆர்.பிரவீண்குமார். எம்.ஏ.எம்.எல்., பிஜிடிஎப்எல் வழக்கறிஞர், புதுச்சேரி அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.  மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடுவர்களாக இருந்து திரு.இராசசெல்வம் (தமிழாசிரியர் – ஓய்வு), திரு.இரா.தேவதாசு (எழுத்தாளர்-கலை இலக்கிய விமர்சகர்), திரு.தமிழ்மணி, திரு.மு.வைத்தியலிங்கன் (பி.எஸ்.என்.எல்-ஓய்வு), திரு.என்.முனுசாமி (பி.எஸ்.என்.எல் – ஓய்வு) சிறப்பாக செயல்பட்டு பரிசுக்குரிய மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.

        மகாகவி பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருமிகு.டி.தியாகராஜன் (கல்வி அமைச்சர் – புதுச்சேரி அரசு) மற்றும் திரு.ஜி.நேரு (எ) குப்புசாமி (அரசு கொறடா மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) பரிசுகளும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்கள்.
விழாவில் திரு.வி.சி.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி-நலவழித்துறை) மற்றும் திரு.ஏ.ஆர்.சண்முகமணி (துணைப் பொதுமேலாளர் (ஓய்வு), பி.எஸ்.என்.எல் புதுச்சேரி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.


        திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் (செயலாளர்) அம்மா சமூக சேவா மையம்) நன்றி கூறினார்.


















Sunday, 9 November 2014

இலவச சித்த மருத்துவ கருத்தரங்கம் – 09.11.2014

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக சித்த மருத்துவ சேவை ஆற்றி வரும் தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் புதுச்சேரி மாநில தொடக்க விழா 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் அம்மா சமூக சேவா மையம், எண்.52 செயிண்ட் சிமோன்பேட், முத்தியால்பேட்டையில் நடைபெற்றது.
       நிகழ்விற்கு அரிமா.மரு.க.கோ.மணிவாசகம் (செயலாளர், த.பா.சி.ம.பா. இயக்கம், நாகப்பட்டினம்) தலைமை தாங்கினார். நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். மரு.சித்தி விநாயகம் (புதுச்சேரி), மரு.மூர்த்தி (புதுச்சேரி), மரு.சோழராஜன் (பரங்கிப்பேட்டை).
       மரு.கொ.இரா.இரவிச்சந்திரன் (செயலாளர் – அம்மா சமூக சேவா மையம் -புதுச்சேரி) வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரை வழங்கினார் : ஆன்மீக ரத்னா. மரு.எம்.வீ.பாலசுப்ரமணியன் (பொதுச் செயலாளர் – ஜனகல்யாண் பேரியக்கம் – ஒட்டன்சத்திரம்). தமிழ்ப்பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் புதுச்சேரி பகுதியைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் திருமிகு.என்.ஜி.பன்னீர்செல்வம் (உள்ளாட்சி அமைச்சர் – புதுச்சேரி அரசு).
       அதனைத் தொடர்ந்து இலவச சித்த மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது.
“பால்வினை நோய்களும் – எய்ட்ஸ் நோயும்” எனும் தலைப்பில் சித்தரடியார்.மரு.மு.தணிகாசலம் (காங்கேயம்) அவர்களும், “நாடி அறிதல்” எனும் தலைப்பில் கவிச்சித்தர்.மரு.க.தனபாலன் (ஆரணி) அவர்களும், “சர்க்கரை நோய் காரணங்களும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் மரு.பொன்.பகலவன் அவர்களும் உரையாற்றினர். திரு.ஏ.இளங்கோவன் (தலைவர் – அம்மா சமூக சேவா மையம் - புதுச்சேரி) நன்றி கூறினார்.













8-ல் கால் பதிக்கும் அம்மா

பல்வேறு சமூகப் பணிகளையாற்றி வரும் அம்மா சமூக சேவா மையம் தனது ஏழு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து எட்டாம் ஆண்டில் காலடி வைக்கிறாள். அதனையொட்டி எட்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வுகள் 08.11.2014 அன்று மாலை 6 மணி முதல் இலாசுப்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள நலவாழ்வுச் சங்க கலையரங்கில் நடைபெற்றது.
       முதலாவதாக அறுமுகன இசை நடைபெற்றது.  செல்வன்.ஆர்.ராஜீவ், செல்வன்.விஸ்வேஸ்வரன், செல்வன்.பி.இன்னிசைவேந்தன் வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து செல்வி.நிவேத்திதா சிவனேசனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து  குழந்தைகளுக்கான மருத்துவக் குறிப்புக்களை வழங்கினார்கள் மரு.க.கோ.மணிவாசகம் (தேவூர்), மரு.தணிகாசலம் (காங்கேயம்), மரு.சோழராஜன் (பரங்கிப்பேட்டை).
       அதனையடுத்து யோகா நிகழ்ச்சியினை வழங்கினார்கள் செல்வி.எம்.ஹேமவர்ஷினி, செல்வன்.ஆர்.கோகுலவாசன், செல்வன். எஸ்.அருள்மொழிவர்மன், செல்வன்.சந்தோஷ்குமார், செல்வி.எஸ்.ரூபஸ்ரீ.  இறுதியாக பரத நாட்டிய நிகழ்ச்சியினை வழங்கினார்கள் : செல்வி.பி.பாக்யலட்சுமி, செல்வி.எஸ்.லாவாண்யா, செல்வி.சி.விசாலி, செல்வி.எம்.கெளசல்யா, செல்வி.கே.ஷ்ருதி, செல்வி.உ.மித்ராட்சயா, செல்வி.ஏ.பத்மலதா, செல்வி.எம்.பூஜா, செல்வி.வி.யமுனா, செல்வி.ஆர்.ஹரிணி, செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா, செல்வி.எம்.நித்யஸ்ரீ, செல்வி.சி.மாதங்கி, செல்வி.ஏ.யோகேஸ்வரி, செல்வி. டி.ஹேமவர்ஷினி.
       நிகழ்வினை வாழ்த்தியும், நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்த மருத்துவர்கள், குழந்தைச் செல்வங்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகினார் : திருமிகு.மு.வைத்தியநாதன் (முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் மற்றும் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்).  விழாவில் 25 ஆண்டு திருமண நாளினைக்  கொண்டாடும் வகையிலே எழுத்தாளர் பாரதிவாணர் சிவா, இராசேசுவரி தம்பதியினர் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார் நல்லாசிரியர். சம்பூர்ணம் நரேஷ்.