Sunday 9 November 2014

8-ல் கால் பதிக்கும் அம்மா

பல்வேறு சமூகப் பணிகளையாற்றி வரும் அம்மா சமூக சேவா மையம் தனது ஏழு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து எட்டாம் ஆண்டில் காலடி வைக்கிறாள். அதனையொட்டி எட்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வுகள் 08.11.2014 அன்று மாலை 6 மணி முதல் இலாசுப்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள நலவாழ்வுச் சங்க கலையரங்கில் நடைபெற்றது.
       முதலாவதாக அறுமுகன இசை நடைபெற்றது.  செல்வன்.ஆர்.ராஜீவ், செல்வன்.விஸ்வேஸ்வரன், செல்வன்.பி.இன்னிசைவேந்தன் வழங்கினார்கள்.  அதனைத் தொடர்ந்து செல்வி.நிவேத்திதா சிவனேசனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து  குழந்தைகளுக்கான மருத்துவக் குறிப்புக்களை வழங்கினார்கள் மரு.க.கோ.மணிவாசகம் (தேவூர்), மரு.தணிகாசலம் (காங்கேயம்), மரு.சோழராஜன் (பரங்கிப்பேட்டை).
       அதனையடுத்து யோகா நிகழ்ச்சியினை வழங்கினார்கள் செல்வி.எம்.ஹேமவர்ஷினி, செல்வன்.ஆர்.கோகுலவாசன், செல்வன். எஸ்.அருள்மொழிவர்மன், செல்வன்.சந்தோஷ்குமார், செல்வி.எஸ்.ரூபஸ்ரீ.  இறுதியாக பரத நாட்டிய நிகழ்ச்சியினை வழங்கினார்கள் : செல்வி.பி.பாக்யலட்சுமி, செல்வி.எஸ்.லாவாண்யா, செல்வி.சி.விசாலி, செல்வி.எம்.கெளசல்யா, செல்வி.கே.ஷ்ருதி, செல்வி.உ.மித்ராட்சயா, செல்வி.ஏ.பத்மலதா, செல்வி.எம்.பூஜா, செல்வி.வி.யமுனா, செல்வி.ஆர்.ஹரிணி, செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா, செல்வி.எம்.நித்யஸ்ரீ, செல்வி.சி.மாதங்கி, செல்வி.ஏ.யோகேஸ்வரி, செல்வி. டி.ஹேமவர்ஷினி.
       நிகழ்வினை வாழ்த்தியும், நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பித்த மருத்துவர்கள், குழந்தைச் செல்வங்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குகினார் : திருமிகு.மு.வைத்தியநாதன் (முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் மற்றும் இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்).  விழாவில் 25 ஆண்டு திருமண நாளினைக்  கொண்டாடும் வகையிலே எழுத்தாளர் பாரதிவாணர் சிவா, இராசேசுவரி தம்பதியினர் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார் நல்லாசிரியர். சம்பூர்ணம் நரேஷ்.

     


























No comments:

Post a Comment