Thursday 11 December 2014

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா - 2014

அம்மா சமூக சேவா மையம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா 2014 - 11.12.2014 வியாழன் மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதிய்லுள்ள சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

        திருமதி.வீ.கண்ணம்மாள் (பொருளாளர் – அம்மா சமூக சேவா மையம்) வரவேற்புரையாற்றினார். மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து அம்மா சமூக சேவா மைய மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக செல்வி.எம்.ஹேமவர்ஷினி, செல்வி.ஆர்.மர்ஷினி, செல்வி.எஸ்.ரூபஸ்ரீ ஆகியோரின் யோகா செயல்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

        அதனைத் தொடர்ந்து செல்வி.பி.பாக்யலட்சுமி, செல்வி.சி.விஷாலி, செல்வி.எம்.பூஜா, செல்வி.ஏ.பத்மலதா, செல்வி.வீ.யமுனா, செல்வி.கே.ஷ்ருதி, செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா, செல்வி.ஆர்.மர்ஷினி ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது .

        அதனைத் தொடர்ந்து பாரதியின் வாழ்வியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் திரு.ஆர்.பிரவீண்குமார். எம்.ஏ.எம்.எல்., பிஜிடிஎப்எல் வழக்கறிஞர், புதுச்சேரி அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.  மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடுவர்களாக இருந்து திரு.இராசசெல்வம் (தமிழாசிரியர் – ஓய்வு), திரு.இரா.தேவதாசு (எழுத்தாளர்-கலை இலக்கிய விமர்சகர்), திரு.தமிழ்மணி, திரு.மு.வைத்தியலிங்கன் (பி.எஸ்.என்.எல்-ஓய்வு), திரு.என்.முனுசாமி (பி.எஸ்.என்.எல் – ஓய்வு) சிறப்பாக செயல்பட்டு பரிசுக்குரிய மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.

        மகாகவி பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருமிகு.டி.தியாகராஜன் (கல்வி அமைச்சர் – புதுச்சேரி அரசு) மற்றும் திரு.ஜி.நேரு (எ) குப்புசாமி (அரசு கொறடா மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) பரிசுகளும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்கள்.
விழாவில் திரு.வி.சி.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி-நலவழித்துறை) மற்றும் திரு.ஏ.ஆர்.சண்முகமணி (துணைப் பொதுமேலாளர் (ஓய்வு), பி.எஸ்.என்.எல் புதுச்சேரி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.


        திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் (செயலாளர்) அம்மா சமூக சேவா மையம்) நன்றி கூறினார்.


















1 comment:

  1. Excellent Job done , really it is needed to the younger generation,

    ReplyDelete