Wednesday 23 September 2015

அம்மா சமூக சேவா மையத்தின் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா

அன்பு நெஞ்சங்களே
அம்மா சமூக சேவா மையம் வெற்றிகரமாக ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறது. இந்த அரிய தருணத்தில் எங்களை வழி நடத்தி வந்த வந்து கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எங்களளது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.





ஒன்பதாம் ஆண்டு தொடகக்க விழா வருகிற 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த ஒரு சிறு நூலினை வெளியிட்டு விழாவை தொடங்கி வைக்கிறார் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.க.இலட்சுமிநாராயணன் அவர்கள். அதனைத் தொடர்ந்து அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் திருமதி.விஜியலட்சுமி (அகில இந்திய வானொலி) வாய்ப்பாட்டு கச்சேரி நடக்கிறது. வயலின் செல்வி.கோயமுத்தூர் எஸ்.உஷா. மிருதங்கம் திரு.கே.வி.வசந்தராஜா. அதனைத் தொடர்ந்து செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் அவர்களின் மாணவிகளின் பரத நாட்டிய நநிகழ்ச்சி நடைபெறுகிறது. கலைபண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு.டி.தியாகராஜன் பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சித்த மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது 

No comments:

Post a Comment