Monday, 12 January 2015
Wednesday, 7 January 2015
ஒலிபெருக்கியா ... தொல்லைபெருக்கியா ... ?
போராட்டம் என்பது தவறான வார்த்தையல்ல. போராட்டம் தான் பல பிரச்சினைகள் தீர வழி வகுத்திருக்கிறது . பல நாடுகளில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கிறது .. ஆனால் இன்று 07.01.2015 காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ரங்கப்பிள்ளை வீதி செஞ்சி சாலை சந்திப்பில் கூம்பு வடிவ ஸ்பீக்கரை வைத்து எவ்வளவு ஒலிபெருக்கியை சத்தமாக வைக்க முடியுமோ அவ்வளவு சத்தமாக வைத்து ஒரு போராட்டம் நடைபெற்றது. இடையில் சில நண்பர்கள் சென்று ஒலிபெருக்கியின் அளவை குறைத்துக் கொள்ள தலைவரிடம் சொன்னார்கள். உடனே ஒலிபெருக்கியின் அளவைக் குறைத்துக் கொண்டார்கள். சில நிமிடங்களில் மீண்டும் அதே உச்சகட்ட ஒலி கேட்க ஆரம்பித்து விட்டது. தலைவரின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை . மேற்கு வங்கத்தில் கூடப் போராடுகிறார்கள். ஆனால் மருத்துவமனை அருகில் ஊர்வலம் சென்றாலோ அல்லது போராட்டம் என்றால் அந்த இடத்தில்ச் செல்கிற போது மெளனமாய்ச் செல்கிறார்கள். மனித நேயத்தை மதிக்கிறார்கள். கயூ பிராஞ்ச் போலிசிடம் கூம்பு வடிவ ஸ்பீக்கர் பயன்படுத்த தடை இருக்கிறதே எப்படி அனுமதிக்கிறீர்கள் என்ற போது மெளனமாக புன்னைகைத்தார். முகநூலில் போட்டல் தான் சரிப்படும் என்று சொன்ன போது அப்படிச் செய்யுங்கள் சார் என்று சொன்னார். அவரது வேண்டுகோளை நிறைவேற்றியாகி விட்டது. தலைமைத் தபால் நிலையம், புதுச்சேரி முன்பு வைத்திருக்கும் மெகா சைஸ் ஸ்பீக்கர் படத்தையும் இத்துடன் காணலாம். ஒரு கூம்பு வடிவ ஸ்பீக்கர் மருத்துவமனையை நோக்கி இருக்கிறது. இன்னொரு ஸ்பீக்கர் BSNL, கனரா வங்கியை நோக்கி. தலைமை தபால் நிலையம் முன்பு வைக்கப்பட்ட மெகா ஸ்பீக்கர் தலைமை தபால் நிலையம், கவர்னர் மாளிகை, சட்டசபை ஆகிய இடங்களை கவனித்துக் கொண்டது. புதுச்சேரியின் காவல் துறை செல்பாட்டுக்கு இது ஒரு எளிய உதாரணம் மீண்டும் சொல்கிறோம். போராட்டங்கள் தவறல்ல. அது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வரை ............
Sunday, 21 December 2014
குழந்தைகள் திரைப்பட விழா
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – பதிவு எண்.822/2007)
எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி
605003.
தொலைபேசி எண். 0413-2235577
/ 9443601439 / 9443801439 / 9443467945
இளந்தளிர்
குழந்தைகள் திரைப்பட பிரிவு குழந்தைகளுக்கான திரைப்பட விழா – டிசம்பர் 2014
23.12.2014 முதல்
01.01.2015 வரை
திரையிடப்படும் இடம் :
அம்மா சமூக சேவா மையம்
·
23.12.2014 – செவ்வாய் மாலை 630 மணி
அமிதாப்
பச்சன் நடிக்கும் “பிளாக்” (ஹிந்தி – ஆங்கில சப் டைட்டிலுடன்)
·
26.12.2014 வெள்ளி மாலை 630 மணி
“WAY HOME” (சீன மொழித் திரைப்படம் - ஆங்கில சப் டைட்டிலுடன்)
·
29.12.2014 – திங்கள் மாலை 630 மணி
“HOME ALONE” (ஆங்கிலம்)
·
30.12.2014 – செவ்வாய் மாலை 630 மணி
“COLOUR OF SPARROWS” (ஈரான் திரைப்படம் - ஆங்கிலம்)
·
31.12.2014 – புதன் மாலை 630 மணி
“MODERN TIMES” சார்லி சாப்ளின் திரைப்படம்
·
01.01.2015 – வியாழன் மாலை 630 மணி
“தங்க மீன்கள்” (தமிழ்)
நல்ல திரைப்படங்களை குழந்தைச்
செல்வங்களுக்கு கொண்டு சேர்க்கும் இனிய முயற்சி .. குழந்தைகளை அனுப்பி வையுங்கள்
.. நீங்களும் உடனிருந்து பார்த்து மகிழுங்கள் .. கதைகள் தமிழில் விளக்கிக்
கூறப்படும் ..
தங்களை அன்புடன் எதிர்நோக்கும் …
ஈ.இளங்கோவன் கொ.இரா.இரவிச்சந்திரன் வை.கண்ணம்மாள்
தலைவர் செயலாளர் பொருளாளர்
Friday, 12 December 2014
Thursday, 11 December 2014
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா - 2014
அம்மா சமூக சேவா மையம் சார்பில்
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா 2014 - 11.12.2014 வியாழன் மாலை 6 மணிக்கு புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதிய்லுள்ள
சவராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருமதி.வீ.கண்ணம்மாள் (பொருளாளர் – அம்மா
சமூக சேவா மையம்) வரவேற்புரையாற்றினார். மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து அம்மா சமூக சேவா
மைய மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக செல்வி.எம்.ஹேமவர்ஷினி,
செல்வி.ஆர்.மர்ஷினி, செல்வி.எஸ்.ரூபஸ்ரீ ஆகியோரின் யோகா செயல்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செல்வி.பி.பாக்யலட்சுமி,
செல்வி.சி.விஷாலி, செல்வி.எம்.பூஜா, செல்வி.ஏ.பத்மலதா, செல்வி.வீ.யமுனா, செல்வி.கே.ஷ்ருதி,
செல்வி.ஆர்.ஹேமஸ்ருதிகா, செல்வி.ஆர்.மர்ஷினி ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
.
அதனைத் தொடர்ந்து பாரதியின் வாழ்வியல் சிந்தனைகள்
எனும் தலைப்பில் திரு.ஆர்.பிரவீண்குமார். எம்.ஏ.எம்.எல்., பிஜிடிஎப்எல் வழக்கறிஞர்,
புதுச்சேரி அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.
மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடுவர்களாக
இருந்து திரு.இராசசெல்வம் (தமிழாசிரியர் – ஓய்வு), திரு.இரா.தேவதாசு (எழுத்தாளர்-கலை
இலக்கிய விமர்சகர்), திரு.தமிழ்மணி, திரு.மு.வைத்தியலிங்கன் (பி.எஸ்.என்.எல்-ஓய்வு),
திரு.என்.முனுசாமி (பி.எஸ்.என்.எல் – ஓய்வு) சிறப்பாக செயல்பட்டு பரிசுக்குரிய மாணவ
மாணவிகளை தேர்வு செய்தனர்.
மகாகவி பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக
நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு
திருமிகு.டி.தியாகராஜன் (கல்வி அமைச்சர் – புதுச்சேரி அரசு) மற்றும் திரு.ஜி.நேரு
(எ) குப்புசாமி (அரசு கொறடா மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) பரிசுகளும்,
சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்கள்.
விழாவில் திரு.வி.சி.கோபிநாத்
(முதுநிலை கணக்கு அதிகாரி-நலவழித்துறை) மற்றும் திரு.ஏ.ஆர்.சண்முகமணி (துணைப் பொதுமேலாளர்
(ஓய்வு), பி.எஸ்.என்.எல் புதுச்சேரி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.
திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் (செயலாளர்) அம்மா
சமூக சேவா மையம்) நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
















