Tuesday, 19 December 2017

அம்மவின் வயது பதினொன்று ..

வணக்கம். அம்மா சமூக சேவா மையம் வெற்றிகரமாக பத்தாண்டு சேவையினை முடித்து பதினோராம் ஆண்டில் கால் பதிக்கிறாள் .. விழா 25.12.2017 மாலை 6.30 மணிக்கு .. அவசியம் வருக ..
அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது – எண்.822/2007)
எண்.3 முதல் தளம், வைகை வீதி, வசந்த நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி 605003.
கைபேசி எண். 9443601439 / 9443801439 / 9443467945

பதினோராம் ஆண்டு தொடக்க விழா

நாள் : 25.12.2017திங்கள் கிழமைமாலை 6 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம், முத்தியால்பேட்டை, புதுச்சேரி 3
வரவேற்புரை :
திரு.கொ.இரா.இரவிச்சந்திரன்செயலாளர்
தலைமையுரை :
திரு..இளங்கோவன்தலைவர்
செயல்முறை அறிவியல்:
திரு.ஆர்.ஸ்ரீதரன்
(புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி)
பொம்மலாட்டம்
கலைமாமணி..தண்டபாணி மற்றும் குழுவினர்,
புதுச்சேரி
ஓவிய வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரை :
திரு.யோகாச்சார்யா.ஆனந்தபாலயோகி பவனானி,
யோகாஞ்சலி நாட்டியாலயா, புதுச்சேரி
நன்றியுரை :
திருமதி.வை.கண்ணம்மாள்பொருளாளர்.

இந்த அண்டத்திலுள்ள அனைத்தும் உயிருடையனவே ; அவற்றில் இறந்தன என்பது எவையும் இல்லை ; செடிகளை, தாவரங்களை வளர்ப்போன் நோய்க்கு ஆளாவதில்லை. ஏன் அவனுக்கு நோய்ப்பட நேரமே இல்லை ; - இயற்கை மருத்துவர்.பாண்டுரங்கம் -


இயற்கையை நேசிப்போம் … இயற்கையோடு இயைந்து இணைந்து வாழ்வோம்…


Wednesday, 13 December 2017

பெங்களூருவில் பெண் குழந்தைகள் ஆலோசனைக் கூட்டம்...

பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகுறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நேஷனம் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் கோ-ஆபரேஷன் அண்ட் சைல்டு டெவலப்மெண்ட், ரீஜனல் செண்டர், பெங்களூருவில் நடைபெற்றது.













Sunday, 19 March 2017

பள்ளி மாணவ / மாணவிகள், பொதுமக்களுக்கு போட்டி ...

போட்டி குறித்த அறிவிப்பு
ஐ.நா. சபை 2017-ம் ஆண்டை "நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டாக" அறிவித்துள்ளது. இந்திய அரசு "சீர்மிகு திறனாளிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்புகள்" என்ற கருத்தை கருப்பொருளாக அறிவித்துள்ளது.
இதையொட்டி புதுவையின் சுற்றுலா அடையாளச் சின்னங்கள், பழம்பெரும் பாரம்பரிய இடங்கள், ம்,உக்கியப் பகுதிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகிய அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம், புகைப்படம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி அறிவியல் தொழில் நுட்ப மாமன்றம், புதுச்சேரி அரசு இணைந்து நடத்திட உள்ளன.
மேலே குறிப்பிட்ட தலைப்பின் அடிப்படையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடமிருந்து ஓவியங்களும், 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் இருந்து கட்டுரையும், பொதுமக்களிடம் இருந்து கட்டுரை மற்றும் புகைப்படமும் படைப்புகளாக வரவேற்கப்படுகின்றன.
படைப்புகளை 25.03.2017க்குள் நேரில் அல்லது தபாலில் கிடைக்கும்படியாக "புதுச்சேரி அறிவியல் இயக்கம், எண்.10 இரண்டாம் தெரு, பெருமாள் ராஜ தோட்டம், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி 605010 என்ற முகவரியில் சேர்க்கவும். அல்லது cerdpsf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9894926925 என்ற கைபேசி எண்ணிலும் பேசலாம்
-புதுவைப்பரணி --