Tuesday 14 July 2015

புதுச்சேரி உழவர்கரை நகராட்சியின் உன்னதமான பணி ...

புதுச்சேரி உழவர்கரை நகராட்சியின் உன்னதமான பணி
கடந்த சில மாதங்களாக புதுச்சேரி உழவர்கரை நகராடட்சி எல்லைக்குட்பட்டட ஜிப்மர் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மமற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை போன்ற இடங்களில்  துரதிர்ஷ்டவசமாக இறக்கும் சிசு சடலங்களை குப்பை கொட்டும் இடங்களிலும் அந்த இறந்து போன சிசுக்களின் பெற்றோர்கள் வீசிவிட்டு செல்கின்றனர் என்ற புகார் பரவலாக செய்தி ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளி வந்தது. அவ்வாறு அவர்கள் செய்யக் காரணம் சொந்த ஊருக்கு அந்த சிசுவின் சடலத்தை எடுத்துச் செல்வடதற்கு பணவசதி இல்லாத முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 
இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில் கொண்டு புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இந்த அவல நிலையை போக்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சிகிச்சையின் போது குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது சில நாட்கள் கழித்து இறந்தாலோ அவற்றை ஊருக்கு கொண்டு செல்வதற்கு பணவசதி இல்லாமல் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் விருப்பம் இருந்தால் அவ்வாறு இறந்து பிறந்த சிசு முதல் 3 வயது குழந்தை வரை உள்ள சடலத்தை உழவர்கரை நகராட்சிக்குட்பட்டட  கருவடடிக்குப்பம் மிந்தகன மையத்தில்  தகனம் செய்யலாம் . இதற்காக மின் தகன மையத்தில் அந்த இறந்து போன சிசுவைப்பற்றிய அனைத்து மருத்துவ ஆவணங்களின் நகழ்களுடன் புதுச்சேரி இலாசுப்பேட்டை காவல் நிலையத்தின் தகன உத்தரவோடு மின்தகன மையத்தில் உள்ள அலுவலகத்தில் இருக்கும் ஊழியரிடம் சமர்ப்பித்து இலவசமாக தகனம் செய்து கொள்ளலாம் என்று புதுச்சேரி உழவர்கரை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு இரேஷ் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எதையும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளுக்கு மத்தியில் இருக்கும் வசதிகளையும் வைத்துக் கொண்டு சாத்திக்கும் திரு ரமேஷுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ... 

No comments:

Post a Comment