Monday 26 January 2015

குடியரசைக் கொண்டாடி மகிழும் புதுச்சேரி ..

இன்று குடியரசு திருநாள் .. புதுச்சேரியே புதுக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகளும், விளக்குத் தோரணங்களும் மயில் குயில் என்று ஏக கலர் கலாட்டா ..
காந்தி சிலை, நேரு சிலை, பாரதி பூங்கா, சட்டசபை, பாரதிதாசன் சிலை, கவர்னர் மாளிகை, பாரதியார் சிலை, தலைமைச் செயலகம் என்று எல்லா இடங்களும் வண்ண வண்ண விளக்குகள் தான்.  புதுச்சேரி மண் எல்லாரையும் சிலையாக்கி மகிழ்ந்திருக்கிறது . தோழர்.ஜீவா, தோழர்.சுப்பையா, அம்பேத்கார், சிம்மக்குரலோன் சிவாஜிகணேசன் என்று பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்













Monday 12 January 2015

பரதநாட்டிய நிகழ்ச்சி
அம்மா சமூக சேவா மைய மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி 10.1.2015 அன்று புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் . 























Wednesday 7 January 2015

ஒலிபெருக்கியா ... தொல்லைபெருக்கியா ... ?

போராட்டம் என்பது தவறான வார்த்தையல்ல. போராட்டம் தான் பல பிரச்சினைகள் தீர வழி வகுத்திருக்கிறது . பல நாடுகளில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கிறது .. ஆனால் இன்று 07.01.2015 காலை 10 மணிக்கு புதுச்சேரியில் ரங்கப்பிள்ளை வீதி செஞ்சி சாலை சந்திப்பில் கூம்பு வடிவ ஸ்பீக்கரை வைத்து எவ்வளவு ஒலிபெருக்கியை சத்தமாக வைக்க முடியுமோ அவ்வளவு சத்தமாக வைத்து ஒரு போராட்டம் நடைபெற்றது. இடையில் சில நண்பர்கள் சென்று ஒலிபெருக்கியின் அளவை குறைத்துக் கொள்ள தலைவரிடம் சொன்னார்கள். உடனே ஒலிபெருக்கியின் அளவைக் குறைத்துக் கொண்டார்கள். சில நிமிடங்களில் மீண்டும் அதே உச்சகட்ட ஒலி கேட்க ஆரம்பித்து விட்டது. தலைவரின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை . மேற்கு வங்கத்தில் கூடப் போராடுகிறார்கள். ஆனால் மருத்துவமனை அருகில் ஊர்வலம் சென்றாலோ அல்லது போராட்டம் என்றால் அந்த இடத்தில்ச் செல்கிற போது மெளனமாய்ச் செல்கிறார்கள். மனித நேயத்தை மதிக்கிறார்கள். கயூ பிராஞ்ச் போலிசிடம் கூம்பு வடிவ ஸ்பீக்கர் பயன்படுத்த தடை இருக்கிறதே எப்படி அனுமதிக்கிறீர்கள் என்ற போது மெளனமாக புன்னைகைத்தார். முகநூலில் போட்டல் தான் சரிப்படும் என்று சொன்ன போது அப்படிச் செய்யுங்கள் சார் என்று சொன்னார். அவரது வேண்டுகோளை நிறைவேற்றியாகி விட்டது. தலைமைத் தபால் நிலையம், புதுச்சேரி முன்பு வைத்திருக்கும் மெகா சைஸ் ஸ்பீக்கர் படத்தையும் இத்துடன் காணலாம். ஒரு கூம்பு வடிவ ஸ்பீக்கர் மருத்துவமனையை நோக்கி இருக்கிறது. இன்னொரு ஸ்பீக்கர் BSNL, கனரா வங்கியை நோக்கி. தலைமை தபால் நிலையம் முன்பு வைக்கப்பட்ட மெகா ஸ்பீக்கர் தலைமை தபால் நிலையம், கவர்னர் மாளிகை, சட்டசபை ஆகிய இடங்களை கவனித்துக் கொண்டது.  புதுச்சேரியின் காவல் துறை செல்பாட்டுக்கு இது ஒரு எளிய உதாரணம்  மீண்டும் சொல்கிறோம். போராட்டங்கள் தவறல்ல. அது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வரை ............