Sunday 19 March 2017

பள்ளி மாணவ / மாணவிகள், பொதுமக்களுக்கு போட்டி ...

போட்டி குறித்த அறிவிப்பு
ஐ.நா. சபை 2017-ம் ஆண்டை "நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான ஆண்டாக" அறிவித்துள்ளது. இந்திய அரசு "சீர்மிகு திறனாளிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்புகள்" என்ற கருத்தை கருப்பொருளாக அறிவித்துள்ளது.
இதையொட்டி புதுவையின் சுற்றுலா அடையாளச் சின்னங்கள், பழம்பெரும் பாரம்பரிய இடங்கள், ம்,உக்கியப் பகுதிகள் மற்றும் குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகிய அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம், புகைப்படம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி அறிவியல் தொழில் நுட்ப மாமன்றம், புதுச்சேரி அரசு இணைந்து நடத்திட உள்ளன.
மேலே குறிப்பிட்ட தலைப்பின் அடிப்படையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடமிருந்து ஓவியங்களும், 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் இருந்து கட்டுரையும், பொதுமக்களிடம் இருந்து கட்டுரை மற்றும் புகைப்படமும் படைப்புகளாக வரவேற்கப்படுகின்றன.
படைப்புகளை 25.03.2017க்குள் நேரில் அல்லது தபாலில் கிடைக்கும்படியாக "புதுச்சேரி அறிவியல் இயக்கம், எண்.10 இரண்டாம் தெரு, பெருமாள் ராஜ தோட்டம், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி 605010 என்ற முகவரியில் சேர்க்கவும். அல்லது cerdpsf@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9894926925 என்ற கைபேசி எண்ணிலும் பேசலாம்
-புதுவைப்பரணி --