Tuesday 3 May 2016

கலைநிகழ்ச்சிகள் 1.5.2016 புகைப்படங்கள் - இரண்டு
















உலக சித்தா தினம் - 1.5.2016 - கலை நிகழ்ச்சிகள்















அம்மா சமூக சேவா மையம் சார்பில் உலக சித்தா தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் புதுச்சேரி இலாசுபேட்டை குறிஞ்சி நகரில் வலம்புரி விநாயகர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நலச்சங்கக் கட்டிடத்தில் 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாய்ப்பாட்டு நிகழ்வில் குரு.ஷண்முகப்ரியாவின் மாணவ, மாணவிகள்.செல்வி.ஏ.அற்புதா, செல்வி.கே.எஸ்.ஜெயவர்ஷினி, செல்வன்.பி.ஜே.தேஜஸ்ரூபன், செல்வி.ஸ்ரீவிஷ்ணுப்ரியா பாடினார்கள். அடுத்து செல்வி.ஹம்சவேணி வீணை இசை நிகழ்வினை நடத்தினார். அதனை செல்வி.சி.நிவேதிதா மூலக்குளம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. செல்வன்.எம்.தானேஸ்வர் யோகா நிகழ்ச்சி அதனை அடுத்து வருவது குழந்தைச் செல்வங்களை மகிழ்விக்க புதுவை ஆழி குழந்தைகள் நாடகக்குழு வழங்கும் வேலு சரவணனின் “கடல் பூதம்” (குழந்தைகளுக்கான நாடகம்), .செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரனின் மாணவிகள். செல்வி.எம்.நித்யஸ்ரீ, செல்வி.இரா.நந்தினி, செல்வி.சு.ஷர்வினி, செல்வி.ச.ரத்திகாலட்சுமி, செல்வி.இரா.ஹரிணி, செல்வி.மு.கெளசல்யா, செல்வி.மு.பூஜா, செல்வி.உ.மித்ராட்சயா, செல்வி.இரா.மர்ஷினி, செல்வி.மு.கலைவாணி, செல்வி.இரா.ரோஷிகா, செல்வி.ச.மாதங்கி, செல்வி.கா.ஷ்ருதி, செல்வி.ச.ராஜேஸ்வரி, செல்வி.கி.தனலட்சுமி, செல்வி.பா.பாக்யலட்சுமி, செல்வி.ச.லாவண்யா, செல்வி.இரா.ஹேமஸ்ருதிகா ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
        திரு.கோபிநாத், (முதுநிலை கணக்கு அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி வாழ்த்துரை வழங்கினார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார் டாக்டர்.கே.வி.ராமன் (Director, H and FWS cum Director Indian system of Medicine and Homeopathy, Puducherry). திருமதி.வை.கண்ணம்மாள் பொருளாளர், அம்மா சமூக சேவா மையம் நன்றி கூறினார். நிகழ்வினை தொகுத்து வழங்கினார் செல்வி.கற்பகம்