Thursday 28 January 2016

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்  சாதனைப் பெண் விருது பெற்ற
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
அவர்களுக்கு
பாராட்டுவிழா
நாள்  : 30.01.2016 – சனிக்கிழமை மாலை 6.30 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம், எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை,       
         முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர் – அ.ச.சே.மையம் தலைமை : திரு.ஏ.இளங்கோவன் – தலைவர் அ.ச.சே.மையம்
வாழ்த்துரை :
திரு.மு.வைத்தியநாதன்
(இலாசுப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் – புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலர்)
திரு.க.இலட்சுமிநாராயணன்
(சட்டமன்ற உறுப்பினர் – முன்னாள் கல்வி அமைச்சர் )
தோழர்.தா.முருகன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி)
யோகாச்சாரி டாக்டர்
ஆனந்த பாலயோகி பவனானி
கவிஞர்.மீனாட்சி, ஆரோவில்

தோழர்.க.முருகன்                        தோழர்.சு.இராமச்சந்திரன்
(துணைப் பொதுச்செயலாளர் – CITU)                (மாநிலப் பொருளாளர்)
தோழர்.என்.கொளஞ்சியப்பன்
உதவித் தலைவர் (BSNL ஊழியர் சங்கம், புதுச்சேரி)
நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் (பொருளாளர் – அ.ச.சே.மையம்)

இவர்களோடு சேர்ந்து வாழ்த்த உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்  
ஏ.இளங்கோவன்    கொ.இரா.இரவிச்சந்திரன்   வை.கண்ணம்மாள்
   தலைவர்                செயலாளர்                         பொருளாளர்
அம்மா சமூக சேவா மையம்

              எண்.52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003.
---------------------------------------------
செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன்
      மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த ஆண்டு “பேஸ்புக்”- நிறுவனத்துடன் இணைந்து “100 சாதனைப் பெண்களை தேர்வு செய்யும்” திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று தொடங்கியது. பல்வேறு துறைகளில் இந்திய அளவில் வியத்தகு சாதனைகள் நிகழ்த்திய 100 சாதனைப் பெண்களை கண்டெடுத்து பாராட்டுவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.  முதல் கட்டமாக இத்தகைய பெருமைமிகு சாதனைகளை பல்வேறு துறைகளில் புரிந்து வரும் பெண்களை முன்மொழியும் பணி 15.07.2015 அன்று தொடங்கி 30.09.2015 அன்று நிறைவு பெற்றது. ஆயிரக்கணக்கில் முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் பெறப்பட்டது.

      இரண்டாம் கட்டமாக அவ்வாறு பெறப்பட்ட முன்மொழிவுகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிலிருந்து 200 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட பெண்களில் 100 பெண்களை இணையம் மூலமாக வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யும் முறை நவம்பர் 7, 2015 அன்று தொடங்கியது. வாக்கெடுப்பு நிறைவு பெற்ற நிலையில் தேர்வு செய்யப்பட்ட 100 பெண்களின் இறுதிப் பட்டியலை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கடந்த 01.01.2016 அன்று அறிவித்தது.

      செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரனுக்கு கலைத்துறையில் சிறப்பான சேவை செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் செரிமோனியல் அரங்கில் பாரதக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு.பிரணாப் முகர்ஜி அவர்கள் 22.01.2016 அன்று வழங்கினார்.
      செல்வி.கிருத்திகாவின் பரதநாட்டியப் பயிற்சி புதுச்சேரி பால் பவனில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, திரு.கிருஷ்ணன், திருமதி.சண்முகசுந்தரி,  ஆகியோரிடம் பரதம் கற்றார். திருமதி.ஜெயஸ்ரீ நாராயணன் அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு ஒரு மாணவியாக இன்றும் பரதம் கற்று வருகிறார். நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கனிணியில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகத்தில் பரதக் கலையில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டப் படிப்பினை முடித்துள்ளார். கனிணிப் பிரிவில் பாண்டிச்சேரி எஞ்ஜினியரிங்க் கல்லூரியில் (P.E.C) பகுதி நேர ஆய்வு மாணவியாக படித்து வருகிறார்.
      சைனாவில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற விழாவில் பங்கேற்று பிஜிங்க், ஷங்காய், நாஞ்ஜிங்க் ஆகிய இடங்களில் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வியட்நாம் நாட்டில் ஆகிய இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சகள் நடத்தியுள்ளார். சமீபத்தில் அந்தமானின் போர்ட்பிளேயரில் நடைபெற்ற தீவுச் சுற்றுலா திருவிழாவில் (ISLAND TOURISM FESTIVAL – I.T.F) பங்கேற்று அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேசிய விருதுகளையும், சமூக, கலாச்சார அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் திருக்குறளின் பெருமையினை உலகுக்கு உணர்த்துவதற்காக மாபெரும் கின்னஸ் சாதனை நிகழ்வினை விரைவில் நடத்த உள்ளார்.
            செல்வி.கிருத்திகா ரவிச்சந்திரன் புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி       அரசு               கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறையில் உதவிப்                          






பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.     

Monday 25 January 2016

குடியரசு தின வாழ்த்துக்கள் - 26.01.2016

தியாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் ..
இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றுத் துளியிலும் அவர்களின் இரத்தம் கலந்திருக்கிறது ..
இந்தியக் குடியரசைப் பேணிக் காப்போம் .. அனைவருக்கும் இனிய குடியரசுத் தின வாழ்த்துக்கள் ..