Saturday 2 May 2015

இலவச வர்ம சிகிச்சை முகாம்

இலவச வர்ம சிகிச்சை முகாம்
சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம். இங்கு யோகா உடற்கல்வி, பாரம்பரிய வர்மக் கலை குறித்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தபால் வழியிலும் கற்கலாம்.
இங்கு பயிலும் மாணவ மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு யோகக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் உடல் வியாதிகளுக்கு வர்ம சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள TAMILNADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY (TNPESU) இணையதளத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசால் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் இங்கு பயிலும் வர்மக் கலை மாணவ மாணவிகள் கல்பாக்கம் அருகிலுள்ள கூவாத்தூர் என்கிற கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு வர்ம சிகிச்சை அளித்தார்கள். அந்த காட்சிகள் இங்கே ...




















Friday 1 May 2015

மீண்டும் இயங்கத் தொடங்கியது மின் தகன மேடை ..

மீண்டும் இயங்கத் தொடங்கியது மின் தகன மேடை
புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் ஒரு மின் தகன மேடையை

உழவர்கரை நகராட்சி நிர்வாகம் செய்து வந்தது. இது கடந்த பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்தது. எனவே பொதுமக்கள் பிணங்களை எரியூட்டினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட புகை காரணமாக பலருக்கு வியாதிகளும் மூச்சு திணறல்களும் ஏற்பட்டது.
எனவே மின் தகன மேடையை சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டும் என அம்மா சமூக சேவா மையம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த தகன மேடையை அமைப்பதற்கு ஏறத்தாழ 1 கோடியே 40 லட்சம் செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தமிழ் ஹிந்து நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது திரு. இரமேஷ் அவர்கள் உழவர்கரை நகராட்சியின் தாசில்தார் ஆக பணி மாற்றம் செய்து வந்த பின்பு பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார். வீட்டு வரி மூலம் 3-1/2 கோடி வசூல் செய்து ஒரு சாதனை படைத்திருக்கிறார். இவரது கீரீடத்தில் இன்னொரு மைல் கல் இப்போது மின் தகன மேடை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் திரு இரமேஷ் அவர்களே .. இன்று வெள்ளிக்கிழமை 01.05.2014 முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் இத்தகன மேடையில் ஒரே நேரத்தில் 2 பிரேதங்களை தகனம் செய்யும் வசதி உள்ளது. இது போன்ற நவீன முறையில் பிரேதங்களை தகனம் செய்வதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஒரு பிரேதத்தை தகனம் செய்ய ரூ.850/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பிரேதங்களை தகனம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கருவடிக்குப்பம் மிந்தகன மையத்தின் நுழைவாயிலில் இயங்கும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் பணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
இப்பணி நடைபெற நடவடிக்கை எடுத்த புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அம்மா சமூக சேவா மையத்தின் நெஞ்சு நிறை நன்றி.
பொதுமக்களிடம் பிணங்களை எரிக்காமல் மின் தகன மேடையை பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக் கூறி சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது புதுச்சேரி அரசு, சுற்றுச்சுழல் துறை, திரு.ரமேஷ் தாசில்தார் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை ..
---கொ.இரா.இரவிச்சந்திரன், செயலாளர், அம்மா சமூக சேவா மையம்,  புதுச்சேரி---